உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 14 நவம்பர், 2012

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

வணக்கம் அன்பர்களே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு அருளிய பகவத் கீதையில் நாம் நம் வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என எளிமையாக கூறியிருக்கிறார்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

ஃபுட் பாய்சன் ஆனா கவலைப் படாதீங்க! வீட்ல மருந்திருக்கு

பண்டிகை என்றாலே பலகாரம் அதிகம் சாப்பிடுவார்கள். அதுவும், நெய், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் வயிறு பிரச்சினையாகிவிடும். அதேபோல் ஒன்றுக்கு ஒன்று ஒத்துக்கொள்ளாத பொருட்களை சேர்த்து சாப்பிடுவதன் மூலமும் ஒவ்வாமை ஏற்பட்டு சிலருக்கு ஃபுட் பாய்சன் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் பண்டிகை நாளும் அதுவுமாக வயிற்றுவலி, டயாரியா என்று படுத்துக்கொள்வார்கள். மருத்துவமனைக்கு ஓடினால் கையில் இருக்கும் பணத்தை பெரிதாக கறந்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்.

அதிகாலையில் ஆரோக்கியம் தரும் தண்ணீர்

வணக்கம் அன்பர்களே, நமது வலைப்பூவின் நூறாவது பதிவு இது. இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்து வந்த அன்பு உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் ஆதரவு இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். இந்த சிறப்பு 100 வது பதிவில் மருந்தில்லா மருத்துவம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் தண்ணீர் எவ்வாறு மிகச் சிறந்த மருந்து என்பதை பார்க்கலாம்.

வேம்பு தோன்றிய கதை

நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா?

ஆன்மீக தகவல்கள்

வணக்கம் அன்பர்களே, நம்மிடையே  உள்ள ஆன்மீக பழக்க வழக்கங்களுக்கான காரணங்கள் உங்களுக்காவே.

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்

ஒரு ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டு, ஆண்டவனே இம்மரக்கன்று சீக்கிரம் வளரவேண்டும்... எனவே நிறைய மழை பெய்யட்டும் என்று வேண்டினான்.

பெருமாளின் வாகனமான கருடன்

பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் எழுந்தருளி இருப்பவர் கருடன். இவரை கருடாழ்வார் என்று குறிப்பிடுவர்.

தாகம் தீர்க்கும் தண்ணீர் தீர்த்தமாவது எப்போது

ஜப்பானில் ஒரு விஞ்ஞானி தண்ணீரின் குணத்தினை ஆராய விரும்பினார். ஒரே நீரை பத்து பாத்திரங்களில் ஊற்றினார். கோயில், மருத்துவமனை, குப்பைகள் நிறைந்த இடம், சிறை, மக்கள் வசிக்கும் வீடு என வெவ்வேறு விதமான இடங்களில் வைத்தார்.

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?

உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின் முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

இருமல் குறைய

வணக்கம் அன்பர்களே, இந்த மழை மற்றும் குளிர் காலங்களில் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய  பிரச்சனை காய்ச்சல், சளியினால் ஏற்படும் இருமல். அதை போக்க மிக எளிய பாட்டி வைத்தியம் இது.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

நாம் யார் யார் பின்னால் செல்ல வேண்டும்

வணக்கம் அன்பர்களே,
அரசியல்கட்சி தலைவர்கள் நன்மை செய்வார்கள் என நம்பி, அவர்கள் பின்னால் செல்லும் அப்பாவி ஏமாளி ஜனங்கள் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், யார் பின்னால் போக வேண்டும், யாருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று சாஸ்திரம் சில விதிகளைச் சொல்லியிருக்கிறது.
*  பஞ்சமகா யக்ஞம் எனப்படும் ஐந்து வகை யாகங்களை தவறாமல் செய்யும் ஒரு வேதியர் வந்தால் அவருக்கு வழிவிட்டு பின்னால் செல்ல வேண்டும்.
*  கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் போ.
*  பசுக்கள் பின்னால் வந்தால், அதற்கு வழிவிட்டு பின்னால் போ.
*  யானை பின்னால் வந்தால், அதை முதலில் விட்டு பின்னால் நட.
*  தலையில் கனமான பொருளை எடுத்துக் கொண்டு ஒருவர் பின்னால் வந்தால், அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல். இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், அதன் பாததூளி (தூசு) நம் மீது பட்டு உடல் சுத்தம், பேச்சில் சுத்தம், மனச்சுத்தம் ஏற்படுவதாக ஐதீகம்.

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibUxFv4a09-SWLKqr_hVlGCqOgw1_hfr2UbPFgNKtOfOYr1N8vbbqTIP5JgOZxiSRZXyY2zfMvAuVtVxudUNe4QZ8dgqQYNAMo5yXsoH8a8SZdzSO9QcSYqc1wSI1uqPkRwVZojDaCjjyS/s400/banana_fruits_and_flower.jpgவணக்கம் அன்பர்களே, இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள்.

கிருஷ்ணர் வெண்ணெயைத் திருடியது ஏன்?

வணக்கம் அன்பர்களே, கண்ணன்  கடவுள்தானே அவன் நினைத்தால் https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjijTlJOtddmfKZWez_EXQPSXy_Pz-UrGIGc2k7-5LJ-kvxgLt_8-_W4Bvvqf1TMIQ7tvRW9owwTk3bu6asdiz_AmGgs0nDN9jWOQJdxGy9oTZn_Wlael7Oj7FbfbZPBZ9cRukTnj5B6Fg/s1600/krishna1baby.jpgபாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெயைத் திருடித் தின்ன வேண்டும்?

சனி, 4 ஆகஸ்ட், 2012

புகைப்படங்கள்


வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் சிறப்பான சித்திரை திருவிழா, வரலெக்ஷ்மி பூஜை, ஆடி பதினெட்டாம் பெருக்கு புகைப்படங்கள் உங்களுக்காகவே.

வியாழன், 19 ஜூலை, 2012

மின்சாரத்தை சேமிக்க...


வணக்கம் அன்பர்களே. இன்றைய சூழ்நிலையில் மின்சாரத்தை சேமிப்பது என்பது நமக்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான் செயல் ஆகும்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெருந்தலைவர் காமராஜர்

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/congress/k-kamaraj.jpgவணக்கம் அன்பர்களே, இன்று நம் ஊரில் பிறந்து இன்றுவரை  இந்தியாவின் விடிவெள்ளியாக இருந்து வரும் ஐயா காமராஜரின் 110 ஆவது பிறந்தநாள். சிலருடைய பிறப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் , சிலருடைய பிறப்பு மற்றவர்களுக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கும் .இதில் இரண்டுக்கும் சொந்தக்காரர் காமராஜர் எனும் பெருந்தலைவர் . இன்னொருவர் சொல்லிக் கொடுத்து வந்த அறிவுக்கும் சுயமான அறிவுக்கும் உள்ள  வித்தியாசத்தை காமராஜரை பார்க்கும் போது உணர முடியும் .

எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்

தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.

மனிதரில் பலவகை

மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது? 

சித்திரைத் திருவிழா



மதுரையில் நடைபெறும் முக்கியமான விழா சித்திரைத் திருவிழா. கோடைகாலமான ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவிற்கு தென்னிந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பக்தர்களும், யாத்ரீகர்களும் வருவது வழக்கம்.

நமது அழகர் கோவில்

மதுரையின் மற்றொரு முக்கியத்துவம் நமது சுந்தரராஜ பெருமாள் அருள் தரும் நமது  அழகர் கோவில். மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருக்கிறது அழகர் மலை. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள அழகர் மலை "திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி" முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது.

கோயில்களில் தரிசனம் செய்யும் போது

வணக்கம் அன்பர்களே, கோயில்களில் தரிசனம் செய்யும் போது நாம் செய்யக்கூடாதவை என்று முன்னோர்கள் வகுத்தவைகளை பார்ப்போம்.

இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoLOPxvQIF9cltfkpp_XdJfuWWbRkS2mJl-hxVwJVEXweNeCsgP0xGfTi6nqrpPWFHbLVn08KmntRVwOqPAhwBpbT90M9O2NV_gaxZwxm7CpixtN69w1KdCD7WkQ1e25uo-hqSSf5mDi8A/s1600/Bathing%252520Lord%252520Balaji%252520with%252520Milk%252520-%252520Phot.jpg
வணக்கம் அன்பர்களே, கடவுளுக்கு நாம் செய்யும் பலவிதமான வழிபாடுகளில் விரைவாக பலன் தருவது அபிஷேகம் மட்டும் தான், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.



ஞாயிறு, 1 ஜூலை, 2012

நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?

பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம். நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதாதா? என்றே பலரும் நினைக்கின்றனர். நீயும் உருவாகு; பிறரையும் உருவாக்கு என்பது சுவாமி விவேகானந்தரின் மேன்மையான கருத்து.  சுவாமிஜி மட்டுமல்ல, பல அறிஞர்கள் இதற்கான தேவையைப் பல தலைமுறைகளாகப் போதித்து வருகின்றனர்.

உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள். மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.
அன்பர்களே எனது கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது, இணைய இணைப்பில் கோளாறு காரணமாக பதிவிடமுடியவில்லை. மேலும் என் Hard disc crash ஆகி விட்டதால் சித்திரை திருவிழா புகைபடங்கள் உள்ளிட்ட பழைய படங்கள் அனைத்தும் அழிந்து விட்டது. எனவே வெகு விரைவில் சித்திரை திருவிழா படங்களை பதிவிடுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். மேலும் நம் கோவிலில் 27.7.12 வெள்ளிகிழமை மாலை நம் பூர்வீக கோவிலில் வரலெஷ்மி பூஜை கொண்டாடப்பட உள்ளது. 2.8.12 வியாழன் கிழமை ஆடி 18ம் பெருக்கு நம் பெரிய கோவிலில் கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் அவசியம் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசிகளை பெற அழைக்கிறோம்.

செவ்வாய், 1 மே, 2012

அழகாய் அழகர் வராரு....

ரமாட்டு வண்டி பயணம், சர்க்கரை சொம்பில் சூட தரிசனம், ஜவ்வு மிட்டாய் என, மாறாத மண் மணத்துடன் நடக்கும், மதுரை சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக களை கட்டியுள்ளது.
மே 2ல், நடக்கும் திருக்கல்யாணமாகட்டும், மே 3ம் தேதி நடக்கும் தேரோட்டமாகட்டும், மே 6ம் தேதி நடக்கும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவாகட்டும், மதுரையே பக்தி கோலம் பூண்டு விடும்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

நம் கோவிலில் இன்று

வணக்கம்  அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று 29.4.12 ஞாயிறு காலை நம் பெரிய கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் திருநன்நீராட்டு வைபவம் நடைபெற இருக்கிறது.

திங்கள், 16 ஏப்ரல், 2012

மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள்

வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும். வந்தால் போகாதது இரண்டு- புகழும், பழியும். போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும். தானாக வருவது இரண்டு- இளமையும், முதுமையும். உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும். அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும். தவிர்க்க முடியாதது இரண்டு- பசியும், தாகமும். பிரிக்க முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும். இழிவைத் தருவது இரண்டு- பொறாமையும், கோபமும்.  அனைவருக்கும் சமமாவது இரண்டு- பிறப்பும், இறப்பும். இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.

மற்றவரை மகிழ்விக்க எளிய வழி

வணக்கம் அன்பர்களே, ஒருவரால் பெற்ற நன்மைக்காக, அவருக்குத் தெரிவிக்கிற மரியாதைதான் நன்றி. முதலில், நமக்கு இந்த உடலையும் உயிரையும் தந்து, அதைப் பேணி வளர்த்து வளமோடு வாழ்வதற்குத் தேவையான இயற்கை வளங்கள் நிறைந்த இந்த உலகையும் தந்தருளிய இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

அட்சய திரிதியை 24.4.12

வணக்கம் அன்பர்களே, பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.   சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.    எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை  என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர்.

ஏழு பிறவிகள்

வணக்கம் அன்பர்களே,ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

சித்திரை திருவிழா 2012 அழைப்பிதழ்

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் சித்திரை திருவிழா 2012 அழைப்பிதழ் உங்களுக்காகவே. அழைப்பிதழை ஏற்று அனைவரும் நம் பெருமாளின் அருளாசியை பெற அழைக்கிறோம்.

செவ்வாய், 27 மார்ச், 2012

நிம்மதியான வாழ்க்கைக்கு நிம்மதியான தூக்கம்

வணக்கம் அன்பர்களே, நம் நிம்மதியான வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது நிம்மதியான தூக்கமும் ஒன்றாகும். நம்முடைய வேலைகளை சரியாக  செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.

திங்கள், 26 மார்ச், 2012

கோவிலின் பொதுக்குழு கூட்டம் ' 2012

வணக்கம் அன்பர்களே, நேற்று 25.5.2012 ஞாயிற்று கிழமை காலை 10:30 மணிக்கு நம் பூர்வீக கோவிலில் நடைபெற்றது.



சனி, 24 மார்ச், 2012

பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி

வணக்கம் அன்பர்களே,  நம் அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமியின் வரலாறு பற்றி இந்த பதிவில் காண்போம்

வெள்ளி, 23 மார்ச், 2012

திருப்பதியில் இதெல்லாம் பார்த்தாச்சா!

திருப்பதிக்கு போனோமா! வெங்கடாஜலபதியை க்யூவில் நின்று தரிசித்தோமா! ஊரைப் பார்த்து வந்தோமா!'' என்று தான் இத்தனை நாளும் இருக்கிறோம். அங்கு தெரியாத சில விஷயங்கள், பார்க்காத சில இடங்களைப் பற்றி தெரிந்து கொண்டால், இனி அங்கு செல்லும்போது, பயனுள்ளதாக இருக்குமே!


 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...