உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoLOPxvQIF9cltfkpp_XdJfuWWbRkS2mJl-hxVwJVEXweNeCsgP0xGfTi6nqrpPWFHbLVn08KmntRVwOqPAhwBpbT90M9O2NV_gaxZwxm7CpixtN69w1KdCD7WkQ1e25uo-hqSSf5mDi8A/s1600/Bathing%252520Lord%252520Balaji%252520with%252520Milk%252520-%252520Phot.jpg
வணக்கம் அன்பர்களே, கடவுளுக்கு நாம் செய்யும் பலவிதமான வழிபாடுகளில் விரைவாக பலன் தருவது அபிஷேகம் மட்டும் தான், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.





முக்தி கிடைக்க:  இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG35VmsWwK7PfU-1fS2yh462Sjdj511i7oUbqii7Pt1gtu6geUNWvzRt3WtbXw6kZMzm890xHBNSPiaKT2MMzrua9dJ6eorwGbQHylAjdrYws2g2hU2nTgnvNje7YBiLARumoNga5zpdcv/s1600/Bathing%252520Lord%252520Balaji%252520with%252520Water%252520-%25252_002.jpgதீர்க்காயுளுடன் வாழ:  சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.

குடும்ப ஒற்றுமை நீடிக்க:  குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

நல்வாழ்க்கை அமைய:  நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய உங்கள் வீட்டில் பிரச்சினை தலையெடுக்காது .

கடன் தீர:  அரிசி மாவுப் பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.

http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_84032839537.jpgநினைக்கும் காரியம் நிறைவேற:  சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.

பிணிகள் தீர:  கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.

குழந்தை பாக்கியம் பெற:  நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பயம் போக்க:  மனதில் தோன்றும் இனம் புரியாத பயத்தை நீக்க எலுமிச்சை சாறால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

இனிய குரல் வளம் கிடைக்க:  இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1mmDf5wEOzuxcDaABkRWtSlxL0MHb7a-9EiWw-R4LhKCQP1QOIlOMTm2RhtcIW0F_Bu90WZ_r_1eLt22jVHZx2HOW_67B9FuCc5A_T2emO-nxAmod6VHvUSjlBdl-QO37ErDNZ3_3dmvq/
செல்வம் சேர:  பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.

பாவங்கள் கரைய:  பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும். நன்றி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...