உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

நம் கோவிலில் இன்று

வணக்கம்  அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று 29.4.12 ஞாயிறு காலை நம் பெரிய கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் திருநன்நீராட்டு வைபவம் நடைபெற இருக்கிறது.
அதுசமயம் அனைவரும் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசிகளை பெற அழைக்கிறோம். மேலும் 5.5.12 சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு நம் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற இருக்கிறது. அபிஷேகத்திற்கு  தங்களால் இயன்ற காய்ச்சாத பசும்பால், இளநீர், சந்தனம், பன்னீர் மற்றும் பிரசாதமாக பழங்களையும் கொண்டு வரலாம். மேலும் அன்று மாலை பூர்வீக கோவிலில் சுவாமிகளுக்கு பொங்கல் வைத்தும், பூப்பந்தல் அலங்காரம் செய்தும் பூஜை செய்து திரி எடுத்து பெரிய கோவிலுக்கு சென்று அன்று எல்லா சுவாமிகளுக்கும் பூஜை நடைபெறும். 6.5.12 ஞாயிற்று கிழமை காலை ரெங்கநாத சுவாமியை எதிர்சேவை செய்து நம் கோவிலுக்கு அழைத்து வந்து பூஜை நடைபெறும்.  சுவாமி ஸ்லோகம் எழுதும் போட்டி, பாடல், நடன போட்டிகள், மியூசிக் சேர் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடைபெறும். அதற்குபின் மதியம் 12:00 மணிக்கு உச்சிவேளை பூஜை நடைபெறுகிறது. பின் மாலை 4:00 மணிக்கு மேல் குத்துவிளக்கு பூஜை நடைபெறும். மாலை 6:00 மணிக்கு மேல் நம் சுவாமிகளுக்கு பூஜை செய்து திரி எடுத்து கோவிலை வலம் வருதல். 7.5.12 திங்கள் கிழமை இரவு கருப்பசாமி, சப்பாணி சுவாமி பூஜை  நடைபெறுகிறது.


நம் கோவிலின் மஹாசித்திரை சித்திரை திருவிழாவிற்கு நம் அனைத்து பங்காளிகளும் தங்கள் குடும்பத்தினருடன் அவசியம் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசிகளை பெற அன்புடன் அழைக்கிறோம்.

திரி எடுத்து வலம் வரும் போது அனைவரும் அவசியம் சுவாமிகளுடன் உடன் வாருங்கள். அந்நேரங்களில் காலணி அணிவதை தவிருங்கள்.  மேலும் நம் கோவிலுக்கு நம்மால் இயன்ற திருப்பணிகளை எப்போதும் செய்து கொண்டிருங்கள். துன்பம் வரும் காலங்களில் மட்டும் சுவாமிகளை நினைக்காதீர்கள் இன்பமாக இருக்கும் நேரங்களிலும் சுவாமிகளுக்கு நன்றி சொல்லுங்கள்.  ஏதாவது காரியத்தடை, மனக்குழப்பம், நோய் போன்றவை அகல நம் பெரியசாமியை நினைத்து காணிக்கையை எடுத்து வையுங்கள். தீராத வினையெல்லாம் தீரும். இது தவிர வாரம் ஒரு முறை நம்மால் இயன்ற தொகையை உண்டியல் காணிக்கையாக எடுத்து வைத்து கோவிலுக்கு வரும் போது உண்டியல்  போடுங்கள், உங்கள் வியாபாரம் செழித்தோங்கும். திருமணதடை நீங்க நம் மாதாவிற்கு வாரந்தோறும் பன்னீர் ஊற்றி, மாதாவின் மஞ்சள்,குங்கும பிரசாதங்களை தினமும் இட்டு வர எல்லாம் சுபமாகும். எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் கருப்பசாமியையும், சப்பாணி சாமியையும் வணங்கினால் உங்களுக்கு பாதுகாப்பாக உடன் இருப்பார்கள். கருப்பசாமி திருநீரை நம்முடன் எப்போதும் வைத்துக் கொள்ளலாம்.

நம் சுவாமிகளின் பாடலை தினமும் ஒரு முறையாவது சொல்லி அவர்களின் அருளாசிகளை பரிபூரணமாக பெறலாம். நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுத்து அவர்களையும் வணங்கி வர செய்யலாம்.

பெருமாள் ஸ்லோகம்
********************************
ஓம் நாராயணாய வித் மஹே வாசு தேவாய தீமஹீ
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

மஹாலட்சுமி ஸ்லோகம்
************************************
 ஓம் மஹா தேவ்யேஸ வித் மஹே விஷ்ணு பத்னிச தீமஹீ
தன்னோ லக்ஷ்மிப்ரசோதயாத்

விநாயகர்  ஸ்லோகம்
********************************
 ஓம் ஏக தந்தாய வித் மஹே வக்ர துண்டாய தீமஹீ
தன்னோ தந்தி ப்ரசோதயாத்

கருப்பசுவாமி பாடல்
*******************************
வீச்சரிவாள் கையில் ஏந்தி எங்கள் வம்சம் காக்கும்
மாவீரன் கருப்பசாமி
சலங்கை ஒலிக்க சந்தனம் பூசி வந்து நீதி சொல்லி எங்கள்
குலம் காக்கும் மாவீரன் கருப்பசாமி

சப்பாணி சுவாமி பாடல்
**********************************
வாசல் பிரதாணி எங்கள் வம்சம் காக்கும்
மதம் பொழிந்த சப்பாணி
தேசப் பிரதாணி எங்கள் பாட்டன் மடியிலே
புரண்டெழுகும் எங்கள்  சப்பாணி

நம் பங்காளிகள் அனைவரும் நம் சுவாமிகளை அனுதினமும் பிரார்த்தித்து
வாழ்வில் எல்லா வளமும் பெறலாம். சித்திரை  திருவிழாவில் கோவிலில் சந்திப்போம். நன்றி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...