உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்

ஒரு ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டு, ஆண்டவனே இம்மரக்கன்று சீக்கிரம் வளரவேண்டும்... எனவே நிறைய மழை பெய்யட்டும் என்று வேண்டினான்.
அவ்வாறே மழை அதிகம் பெய்தது. ஊறிப் போன மரக்கன்று அழுகிவிடுமோ என பயந்தான் சீடன். இறைவா, மழையை நிறுத்தி நல்ல வெயில் அடிக்கும்படி செய்..! என்று வேண்டினான். அப்படியே வெயில் அடித்ததில் செடி வாட ஆரம்பித்தது. பதறிப்போன சீடன், வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், பனி பொழியட்டும்! என்று பிரார்த்தித்தான். தட்பவெப்பம் அடிக்கடி மாறியதில் தாக்குப் பிடிக்காமல் செடி பட்டுப் போனது. இறைவனுக்கு கருணையே இல்லை என குருவிடம் முறையிட்டான் சீடன். எல்லாம் கேட்டபின் குரு சொன்னார், தன் படைப்பில் எதற்கு எப்போது என்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும். சுயநலத்திற்காக அதனை மாற்ற நினைத்து வேண்டினால் இப்படித்தான் ஆகும்! உணர்ந்த சீடன், மற்றொரு மரக்கன்றை நட்டுவிட்டு, இறைவா, இதை நீயே பார்த்துக் கொள்! என வேண்ட ஆரம்பித்தான். எனவே சுயநலம் இன்றி இறைவனை வழிபடுவதே சிறப்பைத்தரும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...