உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

மனிதரில் பலவகை

மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது? 
ஒரு ஞானி கூறியது . பேராசைக்காரன், சராசரி மனிதன், உத்தமன், ஞானி என்ற நான்கு பிரிவுகளுக்குள் எல்லா மனிதர்களையும் வகையாக அடுக்கி விடலாம் எனப் பட்டியல் தருகிறார். அவற்களை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி ..

பேராசைக்காரன் - எல்லாமே என்னுடையது என்னுடையது. உன்னுடையதும் என்னுடையது என்பான்.

சராசரி மனிதன் - என்னுடையது என்னுடையது. உன்னுடையது உன்னுடையது என்பான்.

உத்தமன் -  உன்னுடையதும் உன்னுடையது. என்னுடையதும் உன்னுடையது என்பான்.

ஞானி - உன்னுடையதுமன்று என்னுடையதுமன்று. எல்லாமே இறைவனுடையது என்பானாம்.

இதில் நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...