உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

உங்கள் லக்னத்திற்குரிய தெய்வம் தெரியுமா?

Temple imagesஒருவரது ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அதில் ல/ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ராசிக்கட்டம் தான் லக்னம். உதாரணத்துக்கு இந்த படத்தைப் பாருங்கள். ல/ என்று குறிப்பிடப்பட்டுள்ள கட்டத்தில் புதன் இருக்கிறது. அதாவது, கன்னியில் புதன் உள்ளது. இவர் கன்னி லக்னக்காரர். இவருக்குரிய தெய்வங்கள் பெருமாள், ராமன், கிருஷ்ணர். லக்னத்தில் சூரியன் இருந்தால், சூரிய நாராயணர், சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால் மகாலட்சுமி, பாலா, திரிபுரசுந்தரி உள்ளிட்ட அம்பிகையர், செவ்வாய் இருந்தால் முருகன், லட்சுமி நரசிம்மர், துர்க்கை, குரு இருந்தால் சிவன், தட்சிணாமூர்த்தி, பெருமாள், சனி இருந்தால் வெங்கடாஜலபதி, சாஸ்தா (ஐயப்பன்), யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், கேது இருந்தால் விநாயகர் அல்லது ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்களைத் தரிசிக்க வேண்டும். இந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களைத் தினமும் ஜபிப்பது பலனை அதிகரிக்கும்.

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கணுமா

வணக்கம் அன்பர்களே, உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்க அதிகாலையில் எழுந்ததும் கொல்லைப்புற வாசலைத் திறந்த பின்னரே, தலைவாசலைத் திறக்க வேண்டும். பசுவின் முகத்தில் விழிக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அவசியம் குத்துவிளக்கு ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும். பொருள் வளமும், சந்தோஷமும் பெருகும். பவுர்ணமியன்று மாலையில், பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம் தினம் நடக்கும் ஓர் அதிசயம்..!

வணக்கம் அன்பர்களே திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம் தினம் நடக்கும் ஓர் அதிசயம்..! இதை பற்றி பிரபஞ்சவெளியில் என்ற வலைப்பூவில் நான் படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...