உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

நாம் யார் யார் பின்னால் செல்ல வேண்டும்

வணக்கம் அன்பர்களே,
அரசியல்கட்சி தலைவர்கள் நன்மை செய்வார்கள் என நம்பி, அவர்கள் பின்னால் செல்லும் அப்பாவி ஏமாளி ஜனங்கள் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், யார் பின்னால் போக வேண்டும், யாருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று சாஸ்திரம் சில விதிகளைச் சொல்லியிருக்கிறது.
*  பஞ்சமகா யக்ஞம் எனப்படும் ஐந்து வகை யாகங்களை தவறாமல் செய்யும் ஒரு வேதியர் வந்தால் அவருக்கு வழிவிட்டு பின்னால் செல்ல வேண்டும்.
*  கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் போ.
*  பசுக்கள் பின்னால் வந்தால், அதற்கு வழிவிட்டு பின்னால் போ.
*  யானை பின்னால் வந்தால், அதை முதலில் விட்டு பின்னால் நட.
*  தலையில் கனமான பொருளை எடுத்துக் கொண்டு ஒருவர் பின்னால் வந்தால், அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல். இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், அதன் பாததூளி (தூசு) நம் மீது பட்டு உடல் சுத்தம், பேச்சில் சுத்தம், மனச்சுத்தம் ஏற்படுவதாக ஐதீகம்.

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibUxFv4a09-SWLKqr_hVlGCqOgw1_hfr2UbPFgNKtOfOYr1N8vbbqTIP5JgOZxiSRZXyY2zfMvAuVtVxudUNe4QZ8dgqQYNAMo5yXsoH8a8SZdzSO9QcSYqc1wSI1uqPkRwVZojDaCjjyS/s400/banana_fruits_and_flower.jpgவணக்கம் அன்பர்களே, இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள்.

கிருஷ்ணர் வெண்ணெயைத் திருடியது ஏன்?

வணக்கம் அன்பர்களே, கண்ணன்  கடவுள்தானே அவன் நினைத்தால் https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjijTlJOtddmfKZWez_EXQPSXy_Pz-UrGIGc2k7-5LJ-kvxgLt_8-_W4Bvvqf1TMIQ7tvRW9owwTk3bu6asdiz_AmGgs0nDN9jWOQJdxGy9oTZn_Wlael7Oj7FbfbZPBZ9cRukTnj5B6Fg/s1600/krishna1baby.jpgபாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெயைத் திருடித் தின்ன வேண்டும்?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...