விருதுநகர் இந்து நாடார்கள் தில்லை கோவிந்தன் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட அழகுமலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
வணக்கம் அன்பர்களே, நம் சுவாமி கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு அழகர்கோவிலை விட்டு வந்து வைகை ஆற்றிலே இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து தம் சொந்த இடமான அழகர்கோவிலுக்கு நேற்று திரும்பினார்
வணக்கம் அன்பர்களே, நம் சித்திரை திருவிழாவின் மற்றுமொரு சிறப்பான நிகழ்வான நம் காவல் தெய்வங்களாம் ஶ்ரீ கருப்பசாமி, ஶ்ரீ சப்பாணி சாமி வழிபாட்டு புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.
வணக்கம் அன்பர்களே, நமது சித்திரை திருவிழா 2015 சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் சென்ற வாரம் முதல் சித்திரை திருவிழாவின் உச்சகட்டமான சித்திரா பௌர்ணமி வழிபாடு வரையிலான புகைப்பட தொகுப்பினை உங்களுக்கு இங்கே வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.