உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்

தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.


கெட்ட கனவு வருகிறதா:  சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பிரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு ஸ்லோகமும் உள்ளது.

ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்
வைணதேயம் விருகோதரம் சயனே,
யஸ் ஸ்மரேன் நித்யம்
துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதி.

தூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வரவே வராது.

வடக்கே தலை வைத்து உறங்கும் போது காந்தப்புலத்துக்கு  எதிராக நமது செயல்பாடு இருப்பதால் ஒழுங்கான உறக்கமின்மை, கெட்ட கனவுகள் ,காலையில் எழுந்திருக்கும் போது ஒரு வித மன அழுத்தம் போன்றவைகள் தோன்றுகின்றன. தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டி உறங்கும் போது உலகின் காந்தப்புல திசையுடன் ஒத்திசைவது சுறுசுறுப்புடன் நமது உடலுக்கும் மனதிற்கும்  நல்லது .

கிழக்கே தலை வைத்து உறங்குவது காந்த புலன்களை குருக்கறுப்பதுடன்  சூரிய சக்தியுடன் ஒத்திசையும் .இதுவும் உடலுக்கு நல்லது என்பது தற்போது உளவியலாளர்கள் , விஞ்ஞானிகள் கருத்து . 

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...