உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

ஆன்மீக தகவல்கள்

வணக்கம் அன்பர்களே, நம்மிடையே  உள்ள ஆன்மீக பழக்க வழக்கங்களுக்கான காரணங்கள் உங்களுக்காவே.
சூரியனை ஏன் வணங்க வேண்டும் :

மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள். எப்பொழுது வேண்டுமானாலும் செத்துப்போகக் கூடியவர்கள். நோய் நொடியில் விழக்கூடியவர்கள். தவறு செய்யக்கூடியவர்கள். மிகப் பெரிய அபத்தங்களுக்கு ஆளாகக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் எதிரே வரும்போது முகமன் சொல்கிறீர்களே.. வாழ்க, வணக்கம் என்று சொல்கிறீர்களே.. ஏன்? எதனால்? அவரிடம் இருந்து ஏதேனும் ஒரு நல்ல விஷயம், நல்ல உதவி உங்களுக்கு வந்து சேரும். வந்திருக்கும்; வரலாம் என்ற எண்ணத்தால் அப்படி செய்கிறீர்கள். சூரியனால் இடையறாது இடையறாது பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. அவற்றின் தாக்கம் இங்கே இருக்கிறது. அப்படித் தாக்கம் இருக்கின்ற, தொடர்பு இருக்கின்ற, நல்லது செய்கின்ற கிரகங்களையும் சூரியனையும் சந்திரனையும் வழிபடுவதில் என்ன தவறு? எல்லா சக்தியும் வழிபடக்கூடியவை. சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்கிறார். கடவுளின் பேச்சாக, கடவுளின் குணமாக, கடவுளின் உருவமாக, கடவுளின் பிரத்யட்ச வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன. எல்லாம் வல்ல கடவுளை உங்களால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுவதில் தவறே கிடையாது.


குறித்த முகூர்த்த நேரம் தவறி விட்டதா? கவலையை விடுங்க!

திருமணம், கிரகப்பிரவேசம், காதணிவிழா, போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரம் குறித்து அந்த நேரத்தில் தான் நடத்துவது வழக்கம். ஆனால் தவிர்க்க முடியாத சில நேரங்களில் முகூர்த்த நேரம் தவறிப்போவதும் உண்டு. உதாரணத்திற்கு காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை திருமணத்திற்கு நல்ல நேரம் குறித்திருப்பார்கள். ஆனால் மணப்பெண்ணோ, மண மகனோ அந்த நேரத்தில் திருமண மேடைக்கு வரமுடியாமல் போய்விடும். முகூர்த்த நேரம் முடிந்து விடும். இதனால் பலரும் குழம்பி, மன நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள். இதற்கு என்ன செய்வது? நமது சாஸ்திரத்தில் இதற்கு வழி உள்ளது. அதே திருமண முகூர்த்த நாளில், நண்பகல் 11 மணி 59 நிமிடம், 59 விநாடி முடிந்து மிகச்சரியாக 12 மணிக்கு தாலிகட்டி கொள்ளலாம் என சாஸ்திரங்கள் கூறுகிறது. இதன்படி சிலர் முகூர்த்த நேரத்தை தவற விட்டு நண்பகல் 12 மணிக்கு தாலி கட்டிக்கொண்டு மிகச்சிறப்பாக வாழ்கின்றனர். இந்த நண்பகல் 12 மணி முகூர்த்தத்தை "அபிஜித் முகூர்த்தம் என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். இனிமேல் முகூர்த்த நேரத்தை தவற விடுபவர்கள் இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா சிறப்பு

ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றாலே பால்கோவாதான் நினைவிற்கு வரும். பசுமாடுகள் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் இங்கு அதிகளவில் பால்கோவா போன்ற பால்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பாவையில், "குடம் வைக்க வைக்க பால் நிறையும் அளவிற்கு கறவைகள் (பசுக்கள்) அதிகமாக வாழும் பகுதி என்று பொருள்படும்படியாக ஆண்டாள் பாடியிருக்கிறாள். அவள் இத்தலத்தை கோகுலமாகவே எண்ணி வாழ்ந்ததால் பெருமாள், இப்பகுதியை பசுக்கள் நிறைந்த பகுதியாக மாற்றி அருளினார். இன்றும் இங்கு பசுக்கள் சுரக்கும் பாலிற்கு தனி சுவை இருக்கிறது. எனவே பால்கோவாவும் புகழ் பெற்று விட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்- பெயர் விளக்கம்:ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்திற்குரிய விளக்கத்தைக் கேளுங்கள்.ஸ்ரீ என்றால் லட்சுமி. இவளே ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள். வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னன் பெயர். பாம்பு புற்று நிறைந்திருந்த பகுதியாக இருந்தது என்பதால் "புத்தூர் என்றும் பெயர் வந்தது. பிற்காலத்தில், இவற்றை மொத்தமாகத் தொகுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் என பெயர் பெற்றது.

குளிக்காமல் விபூதி குங்குமம் பூசலாமா?

நீராடியபின் விபூதி பூசுவது தான் சரியானமுறை. உடல்நலக்குறைவு, வயோதிகம், ஆபத்து நேர்ந்த காலத்தில் குளிக்காமல் பூசுவதால் தவறில்லை. உடல் தூய்மையை விட உள்ளத் தூய்மையே முக்கியம் என்றாலும், இதையே காரணம் காட்டி சோம்பலும் எட்டிப் பார்த்து விடும். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள் எனவே இளைஞர்கள் குளியலுக்கு  பிறகே திருநீறு பூச வேண்டும்.

பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள்

மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும்

விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,சூரியனை 2 முறை வலம் வர வேண்டும், தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும், கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

நன்றி.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நான் தினமும் பார்க்கும் இணையதளம் http://www.valaitamil.com/spiritual ஆன்மீக தகவல்களையும், கோவில்கள் பற்றிய தொகுப்புகளையும் அழகாக தொகுத்துள்ளது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..!

Unknown சொன்னது…

கோவில் அறிவியல் நிறைந்த ஒரு கலைக்கூடம் அதனைப் பற்றிய தெளிவான கருத்துகள் சிறிது தெரியுங்களேன்.தற்போதைய ஆன்மீகத்திற்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...