உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

நம் கோவிலில் இன்று

வணக்கம்  அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று 29.4.12 ஞாயிறு காலை நம் பெரிய கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் திருநன்நீராட்டு வைபவம் நடைபெற இருக்கிறது.

திங்கள், 16 ஏப்ரல், 2012

மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள்

வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும். வந்தால் போகாதது இரண்டு- புகழும், பழியும். போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும். தானாக வருவது இரண்டு- இளமையும், முதுமையும். உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும். அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும். தவிர்க்க முடியாதது இரண்டு- பசியும், தாகமும். பிரிக்க முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும். இழிவைத் தருவது இரண்டு- பொறாமையும், கோபமும்.  அனைவருக்கும் சமமாவது இரண்டு- பிறப்பும், இறப்பும். இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.

மற்றவரை மகிழ்விக்க எளிய வழி

வணக்கம் அன்பர்களே, ஒருவரால் பெற்ற நன்மைக்காக, அவருக்குத் தெரிவிக்கிற மரியாதைதான் நன்றி. முதலில், நமக்கு இந்த உடலையும் உயிரையும் தந்து, அதைப் பேணி வளர்த்து வளமோடு வாழ்வதற்குத் தேவையான இயற்கை வளங்கள் நிறைந்த இந்த உலகையும் தந்தருளிய இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

அட்சய திரிதியை 24.4.12

வணக்கம் அன்பர்களே, பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.   சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.    எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை  என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர்.

ஏழு பிறவிகள்

வணக்கம் அன்பர்களே,ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

சித்திரை திருவிழா 2012 அழைப்பிதழ்

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் சித்திரை திருவிழா 2012 அழைப்பிதழ் உங்களுக்காகவே. அழைப்பிதழை ஏற்று அனைவரும் நம் பெருமாளின் அருளாசியை பெற அழைக்கிறோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...