உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibUxFv4a09-SWLKqr_hVlGCqOgw1_hfr2UbPFgNKtOfOYr1N8vbbqTIP5JgOZxiSRZXyY2zfMvAuVtVxudUNe4QZ8dgqQYNAMo5yXsoH8a8SZdzSO9QcSYqc1wSI1uqPkRwVZojDaCjjyS/s400/banana_fruits_and_flower.jpgவணக்கம் அன்பர்களே, இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள்.
வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும் மரமாக நினைக்கிறார்கள். வடக்கு நோக்கி குலை தள்ளினால் அந்த வீடு சிறக்கும். தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும். கிழக்கு நோக்கி குலை தள்ளினால் பதவி கிடைக்கும், மேற்கு நோக்கி குலை தளளினால் அரச பயம் உண்டாகும். இதுபோன்று பல மொழிகள் வாழை மரத்திற்கு உண்டு. வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது. இத்தகைய வாழை மரத்தை கோயில் விழாக்களில் தோரணம் கட்டினாலும் அல்லது கோயில்களில் வாழைக்கன்று வைத்தால் வீட்டில் காணாமல் போனவர்கள் அல்லது பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...