உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 15 ஜனவரி, 2015

சிறப்பு பொங்கல் வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டது

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலில் தை பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாலை 5:00 மணிக்கு பெரிய சாமி முன்பு பொங்கல் வைக்கப்பட்டது. பின் 6:00 மணியளவில் நம் சுவாமிகளுக்கு தீபாராதனை கொடுக்கப்பட்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சிற்றுண்டியும் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் தங்களால் இயன்ற பணிகளை செய்து மகிழ்ந்தனர்.

இனிய பொங்கல் இனிதே பொங்கட்டும்

ராதேக்ருஷ்ணா ... மனம் என்னும் பானையில் சாந்தி என்னும் பொங்கல் பொங்கட்டும்... உடல் என்னும் பானையில் ஆரோக்கியம் என்னும் பொங்கல் பொங்கட்டும்...

வணக்கம்

பொங்கல் பூஜை செய்வது எப்படி

பொங்கல் வைக்க உகந்த நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி.

இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்

வணக்கம் அன்பர்களே, அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். நாளை மறுநாள் நம் கோவிலில் நடைபெற இருக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

வியாழன், 8 ஜனவரி, 2015

தை பொங்கல் வழிபாடு

வணக்கம் அன்பர்களே, வழக்கம் போல் நமது பெரிய கோவிலில் வரும் 15.1.15 வியாழன் மாலை 5.00  மணிக்கு மேல் தை பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெறும். அனைத்து பங்காளிகளும் தவறாது கலந்து கொள்ள அழைக்கிறோம். நன்றி.

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதன், 7 ஜனவரி, 2015

குல தெய்வம்

மனதில் உள்ள குழப்பம் தீர, எந்தக் கோயிலுக்குப் போகலாம் என தன் குருவைக் கேட்டார் ஒருவர். உன் குலதெய்வக் கோயிலுக்குப் போய் வா என்றார் குரு. அது நூறு மைல் தள்ளி இருக்கிறதே. பக்கத்தில் ஏதாவது கோயிலைச் சொல்லக்கூடாதா? என்றார் அவர். இல்லை, குலதெய்வக் கோயிலுக்குத்தான் செல்ல வேண்டும் என்றார் குரு. வீட்டுக்கு வந்த அவர், தம் மனைவி, மகன், மருமகள்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஆளாளுக்கு ஒரு கோயிலைச் சொன்னார்கள். அன்பர் குழம்பி, மீண்டும் குருவிடமே வந்து கேட்டார். அவரவர் விருப்பங்கள் மாறும். ஆனால், குலதெய்வம் மாறாது. குழப்பம், கவலை ஏற்பட்டால் குலதெய்வம் கோயிலுக்குப் போய்விட வேண்டும். ஏனெனில், உங்கள் முன்னோர்கள் காலடியும், நோக்கமும் குவிந்த இடம் அது. குலதெய்வ ஆசியுடன், முன்னோரின் ஆசியும் உனக்குக் கிடைக்கும். அதனால் உனது குழப்பமும் தீரும் என்றார் குரு.

ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்!

எனக்கு ஏழரைச்சனி, எனக்கு அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி என்றெல்லாம் பலரும் நடுக்கம் கொள்கிறார்கள். இவை தங்கள்  வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள்.

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்!

வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.

மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7 .. எவை தெரியுமா?

மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..

புத்தாண்டு பலன் கணித்துள்ளது எப்படி?

பொதுவாக ஆங்கில புத்தாண்டுக்கும், தமிழ் புத்தாண்டுக்கும் மாறுபாடு உண்டு. சூரியனின் நிலை கொண்டு அதன் இடமாற்றத்தை கணக்கில் எடுத்து தமிழ் மாதம் கணிக்கப்பட்டுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...