உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

அதிகாலையில் ஆரோக்கியம் தரும் தண்ணீர்

வணக்கம் அன்பர்களே, நமது வலைப்பூவின் நூறாவது பதிவு இது. இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்து வந்த அன்பு உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் ஆதரவு இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். இந்த சிறப்பு 100 வது பதிவில் மருந்தில்லா மருத்துவம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் தண்ணீர் எவ்வாறு மிகச் சிறந்த மருந்து என்பதை பார்க்கலாம்.
அதிகாலையில் ஆரோக்கியம் தரும் தண்ணீர்:


காலையில்  எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.







பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய உணவு,  இரவு உணவுக்கு பின் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாமல்  கட்டுப்படுத்தும்  வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள்

புற்றுநோய் – 180 நாட்கள்

காச நோய் – 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். “நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.

நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...