உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 27 மார்ச், 2012

நிம்மதியான வாழ்க்கைக்கு நிம்மதியான தூக்கம்

வணக்கம் அன்பர்களே, நம் நிம்மதியான வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது நிம்மதியான தூக்கமும் ஒன்றாகும். நம்முடைய வேலைகளை சரியாக  செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.

நல்ல தூக்கம்:  இரவில் நல்ல தூக்கம் இல்லாவிட்டால் மறு நாள் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.ஒரு நாளைக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரமே உறங்கி அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும்.

ஒரு சிலர் அதிக நேரம் தூங்குவார்கள். ஆனால் அசதியாக இருப்பார்கள். சிலரோ குறைவான நேரம் தான் தூங்குவார்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.  ஆழ்ந்த தூக்கமே (சவுண்ட் சிலீப்) இதற்கு காரணம். நிம்மதியான தூக்கம் வர இடது கை கீழே இருக்கும்படி ஒருக்களித்து படுத்து உறங்க வேண்டும். ஏனென்றால்  இடது பக்கமாகப் படுத்திருக்கும்பொழுது உடல் அந்த பாகத்தை அழுத்துகிறது. இதனால் சுவாசம் வலதுநாசி வழியாகத்தான் வரும். இடதுநாசி வழியாக வராது. வலதுநாசி வழியே மூச்சு வந்தால், மனநிலை அமைதியாக- நல்ல நினைவுகள் உள்ளதாக இருக்கும் என்று நாடி சாஸ்திரம் சொல்லுகிறது. படுக்கும்போது இடதுபக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவதற்கு இதுவே காரணம்.

இதற்கான ஒரு நல்ல பாட்டி வைத்தியம் வேப்பம் இலைகளை எடுத்து நன்கு வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கி வந்தால் நிம்மதியான தூக்கம் வரும். மற்றொரு வைத்தியம் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து படுக்க போகும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

மேலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கவும் , உங்கள் உடல் நலத்தை பேணவும் உதவும் சில குறிப்புகள்,

ஆரோக்கியமான காலை உணவு:  உங்களுடைய நாளை சிறப்பாக அமைக்க நல்ல ஆரோக்கியமான காலை உணவு அவசியம். ஆற்றல் அளவை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானிய உணவுகள் (ஓட்ஸ் கஞ்சி அல்லது ரொட்டி ), புரத சத்துக்கள் நிறைந்த முட்டை, குறைந்த கொழுப்பு சத்துக்கள் அடங்கிய தயிர், மற்றும் வைட்டமின் சி நிறைந்த (ஆரஞ்சு அல்லது சிட்ரஸ் பழங்கள்) போன்றவைகளை உட்கொள்ளுங்கள். காலை உணவை தவிர்ப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய உடல் நோய்களுக்கு உள்ளாக்கும் என்பதை கவனத்தில் கொள்க.

நடக்க வேண்டும்:  உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு வலி, சோம்பல் போன்றவை ஏற்படும். அதோடு உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படாது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அலுவலகத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நடப்பது சிறந்தது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைந்து உடலுக்கு புத்துணர்வு ஏற்படும்.

தண்ணீர் குடிக்க வேண்டும்:  நீண்ட நேரம் வேலை செய்வதால் உடலில் அதிக அளவு நீர் சத்து செலவாகிறது. அதை பூர்த்தி செய்ய தேவையான அளவு உடலுக்கு நீர் செலுத்துவது அவசியம். குடிநீர் உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும். விரும்பினால் தண்ணீருடன் சத்துள்ள பழ சாறுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

சூரிய ஒளி:  சூரிய ஒளி உங்கள் உடலின் வெப்ப நிலையை இயற்கையாக சீராக்க உதவுகிறது. இதனால் மதிய வேளைகளில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பது சிறந்தது.

மதிய உணவு:  அதிக கொழுப்பு அடங்கிய உணவு பொருட்கள் மதிய வேளையில் தூக்கம் வர காரணமாக அமையும். ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் மிக்க கோதுமை, ரொட்டி, சாலட் போன்ற உணவுகளை உட்கொள்வது சிறந்தது.

உரையாடல்:  எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்காமல் நண்பர்களிடம் சிறுது நேரம் உரையாட வேண்டும். இதனால் உடலுக்கு தெம்பு ஏற்படும்.

மேலே கூறப்பட்ட அனைத்தையும் ஒரு நாள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நாள் அற்புதமாக, அமைதியாக அமைய இந்த வழிகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

நன்றி.



கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...