உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

புளியோதரை

  • அரிசி - மூன்று கோப்பை
  • பொடி தயாரிக்க:
  • காய்ந்த மிளகாய் - பத்து
  • தனியா - மூன்று தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு - மூன்று தேக்கரண்டி
  • வெந்தயம் - முக்கால் தேக்கரண்டி
  • மிளகு - அரை தேக்கரண்டி
  • எள்ளு - இரண்டு தேக்கரண்டி
  • பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கைகள்
  • உப்பு - ஒரு தேக்கரண்டி.
  • புளிக்காய்ச்சல் தயாரிக்க:
  • புளி - ஆரஞ்சு பழமளவு
  • எண்ணெய் - அரைக்கோப்பை
  • கடுகு - ஒன்றரை தேக்கரண்டி
  • மஞ்சத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு - இரண்டு தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - நான்கு
  • வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
  • பெருங்காயம் - கால் தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உப்பு - நான்கு தேக்கரண்டி


முதலில் அரிசியை வேக வைத்து உதிர் உதிராக வடித்து ஆற வைக்கவும். புளியை சுடுதண்ணீரில் ஊறவிடவும்.
பொடிக்கு தேவையானப் பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து, கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஊறிய புளியில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டு கலக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணெயைக் காய வைத்து கடுகைப் போடவும். அது பொரிந்தவுடன் முதலில் கடலைப்பருப்பை போடவும்.
பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும்.
அதன் பிறகு வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் அதில் கலக்கி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்த பிறகு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலக்கி, அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
பிறகு ஆறவைத்துள்ள சோற்றுடன் புளிக்காய்ச்சலை சிறிது சிறிதாக சேர்த்து, தேவையானால் இரண்டு தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து நன்கு கிளறவும்.
இப்போது சுவையான புளியோதரை தயார். அவரவர் விருப்பத்திற்கேற்றார்போல் புளியை கூட்டிக் குறைத்து கொள்ளலாம்.

2 கருத்துகள்:

Rajarathinam சொன்னது…

This site is very nice than the previous one!! Tips for preparing prasadhams was nice!!!

தில்லை கோவிந்தன் வகையறா சொன்னது…

ரொம்ப நன்றி திரு.ராஜரத்தினம். தங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...