உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

லட்டு பிரசாதம்

வணக்கம் அன்பு நெஞ்சங்களே, இது சித்திரை திருவிழா நேரம் என்பதால் பிரசாதங்கள் தயாரிப்பு முறையை வெளியிடுகிறோம். செய்முறை விளக்கங்கள் சில சமையல் குறிப்பு பிளாக்குகளில் இருந்தே எடுத்து வெளியிடப்படுகிறது. அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த முக்கிய பிரசாதமான லட்டு தயாரிப்பு முறையை எழுதுகிறோம்.
தேவையான பொருட்கள் 

  • கடலை மாவு - கால் கிலோ
  • சீனி - அரை கிலோ
  • நெய் - மூன்று தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு - ஐம்பது கிராம்
  • ஏலக்காய் - பத்து
  • கிஸ்மிஸ் - இருபது
  • மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
  • ரீபைண்டு ஆயில் - அரை லிட்டர்
  •                                   
                                                 செய்முறை
    கடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு நாள்பட்டதாக இருந்தால் சுவை நன்றாக இருக்காது. புதிய மாவாக எடுத்துக் கொள்ளவும்.
    தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும். முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவிட்டும் உடைத்துக் கொள்ளலாம். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
    ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சீனியைக் கொட்டி, ஒரு டம்ளர் நீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். இளம் கம்பி பதம் என்பது கரண்டியில் எடுத்து விரலால் தொட்டு மூன்று வினாடிகள் கழித்து விரலைப் பிரித்தால் மெல்லிய கம்பி இழை போல் வரும்.
    குறிப்பிட்ட பதத்திற்கு பாகு தயாரானதும், அந்தப் பாகிலேயே கலர் பவுடர் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்.
    கடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது. மீண்டும் சிறிது கடலை மாவு சேர்த்தால் சரியாகி விடும்.
    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
    பூந்தியை சிறிது நேரம் வேக விடவும். முறுகி விடக் கூடாது.
    பதமாக வெந்ததும், பூந்தியை சாரணி கொண்டு அரித்து எடுத்து, சீனிப் பாகில் உடனே கொட்டவும். இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போடவும்.
    பின்னர் உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும். ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும்.
    கை பொறுக்கும் சூடு வந்தவுடன் லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.
    தங்கள் வீட்டிலேயே செய்து பெருமாளுக்கு படைத்து மகிழுங்கள்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...