உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

அபிஷேக பலன்கள்

நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

  • சந்தனாதித் தைலம் - சுகம்தரும்.
  • திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும்.
  • பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்.
  • பால் - நீண்ட ஆயுள் கிட்டும்.
  • தயிர் - நன்மக்கட்பேறு கிடைக்கம்.
  • நெய் - வீடு பேறு அடையலாம்.
  • தேன் - சுகம்தரும், குரல் இனிமை தரும்.
  • கரும்பின் சாறு - நல்ல உடலைப் பெறலாம்.
  • இளநீர் - போகம் அளிக்கும்.
  • எலுமிச்சம் பழம் - பகைமையை அழிக்கும்.
  • விபூதி - போகமும், மோட்சமும் நல்கும்.
  • சந்தனக் குழம்பு, பன்னீர் - திருமகள் வருவாள்.
  • வலம்புரிச் சங்கு - தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.
  • நெல், எண்ணை - விஷசுரம் நிவர்த்தி.
  • நீர் - சாந்தி உண்டாகும்.
  • வாழைப்பழம் - பயிர் விருத்தி ஆகும்.
  • வெல்லம் - துக்க நிவர்த்தி.
  • சர்க்கரை - சத்ரு நாசம்.
  • அன்னம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
  • மாம்பழம் - வெற்றி கிடைக்கும்.
  • சொர்ணாபிஷேகம் - இலாபம் தரும்.
  • கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.
  • பால் பஞ்சாமிர்தம் - சம்பத்து நல்கும்.
        
    • சுத்தமான  தண்ணீரால்  அபிஷேகம்  செய்தால் நினைக்கின்ற  காரியம்  நிறைவேறும்
    • இளநீரால்  அபிஷேகம்  செய்தால்  குடும்பம்  நலம்  பெறும்.
    • பசும் பாலினால்  அபிஷேகம்  செய்தால்  ஆயுள்  அதிகரிக்கும் .
    • பசும் தயிரினால் அபிஷேகம்  செய்தால்  புத்திர    விருத்தி  ஏற்படும்.
    • நல்லெண்ணெய்  அபிஷேகம் செய்தால்  வாழ்க்கை சுகமாகவும்  சுவையாகவும்  அமையும் .
    • சந்தனத்தால்  அபிஷேகம்  செய்தால்  எட்டுவித  செல்வம்  கிடைக்கும்.
    • நெல்லி முல்லைப்  பொடி செய்து  அபிஷேகம்  செய்தால்  நோய்கள்  நீங்கும் .
    • பஞ்சு  கவ்வியத்தால் அபிஷேகம்  செய்தால்  பாபங்கள்  நீங்கும் (பஞ்ச  கவ்வியம்  என்பது  பசுவின் பால், தயிர், நெய் ,கோமியம் ,சாணம் இவை  ஐந்தும் சேர்ந்தது )
    • பஞ்சாமிர்தத்தால்  அபிஷேகம்  செய்தால்  உடல்  நலம் பெறும் .
    • தேன் அபிஷேகம் செய்தால்  வாழ்வு  இன்பமயமாகும் .
    • வாழை  பழத்தால் அபிஷேகம்  செய்தால்  பயிர்கள்  செழிக்கும் .
    • அன்னத்தால் அபிஷேகம்  செய்தால்  ராஜபோக வாழ்வு கிட்டும் .
    • இவை  தவிர  மாப்பொடி  கடன்  தீரவும் ,மஞ்சள் பொடி  வசீகரம்  ஆகிய  பலன்களையும்  தரும் . 
    • மற்றும்  கரும்பின்  சாறு  பிணி  நீக்கவும் ,எலுமிச்சம்  சாறு  பயம்  நீக்கவும்  செய்கிறது .

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...