உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 6 ஏப்ரல், 2011

கோவிலில் வழிபடும்முறை

வணக்கம் அன்பு நெஞ்சங்களே, நாம் கோவிலில் வழிபடும் முறையை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.


*கோவிலில் நாம் ஒவ்வொரு இடத்திலும் விழுந்து கும்பிடக் கூடாது.
*கோவிலின் முன்புறம் அமைந்துள்ள கொடிமரத்தின் முன்பு மட்டும் தான் விழுந்து வணங்க வேண்டும்.
*கோவிலில் கடவுளை தவிர யாரையும் வணங்க கூடாது. அப்படி செய்வது கடவுளை அவமதிப்பது போலாகும்.
*கோவிலில் எல்லா பிராகாரத்தையும் சுற்றி வந்து சிறிது நேரம் அமைதியாக      உட்கார வேண்டும்.
*கோவிலில் மணி அடிக்கும் போது வெளிச்செல்லக்கூடாது

* எந்த கோவிலில் வணங்க சென்றாலும் முதலில் விநாயகரை வணங்கிய பின்னரே மற்ற சன்னதிகளுக்கு சென்று வணங்க வேண்டும்
* கோவிலில் மற்றவருக்கு தொந்தரவு ஏற்படுத்தும்படி சத்தம் எழுப்பி வணங்கலாகாது
* பொதுவாக கோவிலுக்கு சென்று வீடு வந்த பின் கோவிலில் தரும் பிரசாதத்தை சூடு செய்து உண்ணக்கூடாது
* கோவிலில் கடவுளுக்கு சாத்திய மாலையை நமக்கு அணிவித்தபின் திரும்ப வீட்டில் அதனை பத்திரமாக வைக்க வேண்டுமே அன்றி வீட்டில் உள்ள சாமி படத்திற்கு சாத்த கூடாது
* கோவிலுள் விழுந்து வணங்கும்போது நேராக படுத்து வணங்க கூடாது. குறுக்காக படுத்து வணங்க வேண்டும். அப்போதுதான் இறைவனை தரிசிக்க வரும் ஞானிகள் மற்றும் சித்தர்கள் நம்மை தாண்டி செல்வதுபோல அமையும். இது அவர்களின் அருள் கிடைக்கும்.
*  பெண்கள் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கக்கூடாது. ஆனால் ஆண்கள் சாஷ்டாங்கமாகத்தான் விழுந்து வணங்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...