உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

அக்கார வடிசல்




பச்சரிசி - அரை டம்ளர்
பாசிப்பருப்பு - ஒரு தேக்கரண்டி (லேசாக வறுத்து கொள்ளவும்)
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
பால் - ஒரு டம்ளர்
துருவிய வெல்லம் - அரை டம்ளருக்கு கொஞ்சம் கம்மி
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
ஏலக்காய் - இரண்டு
முந்திரி - ஐந்து (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
கிஸ்மிஸ் பழம் - ஐந்து
உப்பு - ஒரு பின்ச்
நெய் - நான்கு தேக்கரண்டி


அரிசி பருப்பு வகைகளை களைந்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
குக்கரில் இரண்டு தேக்கரண்டி நெய்விட்டு அரிசி பருப்புகளை வதக்கவும். வதக்கியதும் பால், அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதனுடன் வெல்ல தண்ணீரையும் சேர்க்கவும். ஒரு பின்ச் உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.
இப்போது நன்கு கொதிக்கவிட்டு தீயை மிதமாக வைத்து குக்கரை மூடி முன்றாவது விசில் வரும் போது இறக்கவும்.
ஒரு தேக்கரண்டி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பழத்தையும் வறுத்து சேர்க்கவும்.
கடைசியில் மீதி நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான அக்கார வடிசல் ரெடி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...