உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

சிறப்பான சிறப்பு உழவாரப்பணி

வணக்கம் அன்பர்களே, சிறப்பு உழவாரப்பணி மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது
இன்று 17.4.16 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு சிறப்பு உழவாரப்பணி தொடங்கியது. கிட்டத்தட்ட எண்பது பேர் கலந்து கொண்டு நம் சுவாமிகளுக்கு சேவை செய்து மகிழ்ந்தனர். நம் பெரியசாமி, விநாயகர், கருப்பசாமி, சப்பாணி சாமிக்கு ஆண்களும், நம் மாதாவுக்கு பெண்களும் சேவை செய்தனர். பின் நம் முன் மண்டபத்தை, கன்னி மூலை அறையை அனைவரும் சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தினர். அதன் பின்னர் நம் குழந்தைகள் அனைவரும் கோவிலுக்குள் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் முதலிய குப்பைகளை அப்புறப்படுத்தினர், மதிய உணவுக்கு பின்னர் நம் பெண்கள் அழகிய கோலங்களை வரைந்தனர். மாலை ஆறு மணிக்கு மேல் அனைத்து சுவாமிகளுக்கும் பூஜை நடைபெற்றது. சிறப்பு உழவாரப்பணி மிகச்சிறப்பாக நடைபெற்றது.










கிட்டத்தட்ட நம் சித்திரை திருவிழாவின் முன்னோட்டமாகவே இந்த உழவாரப்பணி அமைந்து விட்டது. இந்த ஆண்டு சிறப்பு உழவாரப்பணியை தவற விட்டவர்கள் கண்டிப்பாக அடுத்த ஆண்டாவது கலந்து நம் சுவாமிகளின் அருளாசிகளை பெறுங்கள்.




வரும் 21.4.16 முதல் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு அனைத்து பங்காளிகளும் தங்கள் குடும்பத்தினருடனும், உடன் பிறந்த மக்களுடனும் வந்திருந்து நம் சுவாமிகளின் அருளாசிகளை பெற நம் டிரஸ்டிகளின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம். நன்றி.


கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...