உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

திரு மந்திர விளக்கம் ஓம் நமோ நாராயணாய நம

வணக்கம் அன்பர்களே, நாம் அன்றாடம் தியானித்து வரும் நம் பெருமாளின் ஓம் நமோ நாராயணாய மந்திரத்தின் விளக்கம் இதோ உங்களுக்காக.

ஓம்
      அண்டத்தின் அனைத்து இயக்கங்களும் அதிர்வலைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது , உலகத்தில் ஆதியாக தோன்றிய மற்றும் அண்டத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கும் ஒரு அலை தத்துவம், ஆகாயத்தின் பிரமாணமான ஒலி தத்துவம் ,எனவே உயர்ந்த காரியங்கள் செய்யும்பொழுது அரசனை காணும் முன் காவலாளியிடம் நம்மை முற்படுத்துவது போன்று, எங்கும் வியாபித்த ஆதி தத்துவத்தின் மூலம் துவங்கும் காரியத்தின் துவக்கம் உணர்த்துதல்,அறிவித்தல்.

நமோ

    நம, நமோ என்ற இரண்டு பதங்கள் , நம என்பதனை நமசிவாய என்ற மந்திரத்திலும் நமோ என்பதை நாராயணாய என்ற மந்திரத்திலும் உபயோகிக்கிறோம். சிவம் என்பது அண்டங்களின்  பரவு தன்மை  பற்றியது ,அண்டத்தின் விரிவுகள் கணக்கில் அடங்காதது , அதுபோல இந்த அண்டத்தில் பருப்பொருள் ஆராய்ச்சி மூலம் ஆத்ம ஞானம் அடைய விழைந்தால் அடி முடி காண்பதில் பிரம்மனுக்கு ஏற்பட்ட நிலையே நம் நிலையும் ,எனவே சிவ யோகத்தில் கிடைக்கும் சித்துக்களில் விளையாடினால் மீண்டும் மாயா சக்தியால் ஆட்பட்டு ஆத்ம ஞானம் கேள்விக்குறி ஆகிவிடும்..சித்துக்கள் கை கூடினாலும் சிவயோகத்தால் சித்த சக்தியை அடக்கி தன்னுள் ஒடுங்குவதை நம என்ற சொல் குறிக்கும்,

    நம் அறிவிலும் சிறியது மனம் , மனத்தினும் சிறியது ஆத்மா, எனவே தான் நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார் செத்ததின் வயிற்றில் சிறியது என ஆத்மாவை குறிப்பிடுகிறார்.இயற்கையின் அடிப்படை விதிகளின் படி நம்மால் மிக நுண்ணிய பொருள்களை அதிக நேரம் கண்ங்களால் கூட பார்த்துக்கொண்டோ அல்லது நினைவுகளை அதன் மீது  நிலை நிறுத்துவதோ மிக கடினம்,ஆயினும் தியானத்தின் மூலம் அறிவை மனத்தின்மேல் திருப்பி, அறிவினால் மனத்தை உணர்ந்து,மனம் வசப்பட்ட பின் மனத்தினால் அதைவிட சிறிய பொருளான ஆத்மனை உணரவேண்டும்,,அறிவினால் நேரடியாக ஆத்மனை உணர முடியாது. மொத்த அறிவினை மனத்தின் கண் விரித்து மனதை உணர்ந்த பின் , மொத்த மன ஆற்றலை ஆத்மன் மேல் விரித்து ஆன்மனை உணர்தல் வேண்டும் என்பதே நமோ-விரித்தல்

நார அயன அயன ஆய

 நார-மனுடத்துவம் , 
 மாறுதல்- அயனம் ,
 அயன் பிரம்மம்
 ஆய- ஆராய்ந்து முடிவுணர்தல்.

உடலில் உரையும் ஆத்மா நான் மானுடன் என்ற நம்பிக்கையை கைவிட்டு,  தன் உண்மை ரூபத்தை பற்றிய ஆய்வில் இறங்கி, நான் இந்த உடல் அல்ல ஆத்மன் என்னும் தத்துவத்தை நோக்கி தனது நம்பிக்கையை ஆத்மா சிந்தனை நோக்கி திருப்புதல் -அயன

   ஆத்மனே நான் என்ற உணர்வு பெற்ற பின் ஆத்ம  ஞானத்தால் ஆதி  பிரம்மமாகிய அண்ட  நாயகனின் துணைகொண்டு பிரம்ம ஞானம்  உணர்தல் {பிரம்ம ஞானம் }-அயன

     நிறை பிரம்ம ஞானத்தால் மெய்ப்பொருள் ஆராய்ச்சி செய்ய கிடைக்கும் ஒரே ஒரு பொருள் ஓம் நமோ நாராயணாய நம அங்கு அனைத்து ஆத்மாக்களும் அடக்கம் அனைத்தும் நிறைந்த நிறைவுப்பொருள்  -நம.

மாறன் சடகோபன் திர்வடிகள் சரணம் ,
ராமானுஜன் மலரடிகள் சரணம் .
நன்றி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...