உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

விரதம் இன்று ஆரம்பம்

வணக்கம் அன்பர்களே, நம் சித்திரை திருவிழாவிற்கான விரதம் இன்று 7.4.16 முதல் ஆரம்பமாகிறது.
நம் முன்னோர்கள் சொன்னபடி, நம் பெரியவர்கள் வழிகாட்டுதலின் படி நம் கோவில் சித்திரை திருவிழாவிற்கான விரதம் இன்று முதல் ஆரம்பமாகிறது. நம் கோவிலின் விரதம் என்பது சித்திரா பௌர்ணமிக்கு முந்தைய அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலானது. விரதகாலத்தின் போது  நம் குலதெய்வங்களான ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள், நம் தாயார்கள் ஶ்ரீ சுந்தரவள்ளி தாயார், ஶ்ரீ கோதைநாயகி தாயார், ஶ்ரீ கோவிந்த விநாயகர், காவல் தெய்வங்களான ஶ்ரீ கருப்பசாமி, ஶ்ரீ சப்பாணி சாமியை தினமும் நினைத்து மனமுருக வழிபட வேண்டும், உள்ளூரில் இருப்பவர்கள் தினமும் கோவிலுக்கு சென்று வழிபடுதல் மிகவும் நல்லது. கோவிலுக்கு தங்களால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும். அசைவ உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும். விரதம் என்பது சித்திரை திருவிழா வழிபாட்டிற்கு மிக முக்கியமான ஒன்று. சிறப்பான விரதமே பெருமாளின் அருளாசியை பெற எளிய வழி. எனவே விரத முறைகளை நன்றாக கடைப்பிடித்து சித்திரை திருவிழாவிற்கு வாருங்கள், நம் தெய்வங்களின் அருளை பெற்று மகிழுங்கள்.



நம் கோவிலின் அழைப்பிதழ். அனைவரும் வருக, அருளாசி பெறுக.

நம் பெரிய கோவிலில் வரும் 17.4.16 ஞாயிற்றுகிழமை காலை 9:00 மணி முதல் சிறப்பு உழவாரப்பணி நடைபெற உள்ளது. நம் சுவாமிகள் அனைவருக்கும் மாக்காப்பிட்டு திருநன்னீராட்டு நடைபெறும். அதுசமயம் நம் பங்காளிகள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

இன்று 7.4.16 வியாழன் காலை 10:30  மணிக்கு மேல் நம் பூர்வீக கோவிலில்
வைத்து கோவில் சேலை திரு.P.C.சுந்தரராஜன் அவர்கள் தலைமையில் வழங்கப்படுகிறது. நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...