உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

சிறப்பு உழவாரப்பணி

வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்று 17.4.16 ஞாயிற்றுக் கிழமை காலை 9:00 மணிக்கு நடைபெறும் சிறப்பு உழவாரப்பணிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

சிறப்பு உழவாரப்பணி : இன்று நடைபெறும் உழவாரப்பணியானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். இரண்டு நாட்களுக்கு முன்னரே தயிரும், பச்சரிசி மாவும் கலந்து நம் சுவாமிகளின் அர்ச்சாவதார ஸ்வரூபங்களின் மேல் இட்டு பின் இன்று அவர்களின் மேல் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கை சுத்தப்படுத்துவார்கள்.

மேலும் நம் கோவிலை முழுவதும் சுத்தப்படுத்தும் பணியும் நடைபெறும். சுவாமிகளின் முன்பாக கோலங்கள் இடுவது என இன்று காலை முதல் மாலை வரை நம் பங்காளிகளால் உழவாரப்பணி சிறப்பாக செய்யப்பட இருக்கிறது. குறைந்தது ஐம்பது பேர் கலந்து கொள்வார்கள்.

உள்ளூர் பங்காளிகள் மட்டுமல்லாமல் வெளியூர் பங்காளிகளும் வந்து கலந்து கொண்டு உழவாரப்பணி செய்து மகிழ்வார்கள். இரண்டு மாதத்திற்கு முன்பே நம் சித்திரை திருவிழா நடைபெறும் சித்திரை திருவிழா தேதியை எங்களிடம் விசாரிக்கும் போதே சிறப்பு உழவாரப்பணி என்றைக்கு என்றும் கேட்டு தவறாமல் வெளியூரில் இருந்து வரும் பங்காளிகள் அனேகம் பேர்.


இன்று நடைபெறும் உழவாரப்பணியின் போது மட்டுமே நாம் நம் சுவாமிகளின் அர்ச்சாவதார ஸ்வரூபங்களை தொட முடியும். எனவே சுவாமிகளை தொட்டு சேவை செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக விரதம் இருந்து வாருங்கள். சிறு குழந்தைகளும் பக்தியுடன் வந்து நம் சுவாமிகளுக்கு சேவை செய்யும் அழகை காண கண் கோடி வேண்டும்.

இன்று நடைபெறும் சிறப்பு உழவாரப்பணி புகைப்படங்கள் நம் Whatsapp Groupல் உடனடியாக பதிவேற்றப்பட்டு கொண்டே இருக்கும் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே இன்று வரமுடியாதவர்களும் அடுத்த ஆண்டு சிறப்பு உழவாரப்பணியில் கலந்து நம் சுவாமிகளின் அருளை பெறுங்கள்.

நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...