உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

அழகரின் சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல்

வணக்கம் அன்பர்களே, வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகரின்
விழா நிகழ்ச்சி நிரல்.


மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் மலையில் இருந்து மதுரை வரும் வழியில் 416 திருக்கண் மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

 மதுரையில் வருகிற 10-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. அழகர்மலை கள்ளழகர் கோயில் திருவிழாவானது 7-ஆம் தேதி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் நிறைவடைந்த மறுநாள் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பாடாகிறார். 20-ஆம் தேதி மாலையில் தோளுக்கினியனாக தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்பாடாகி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, சுந்தரராஜன்பட்டி, கண்ணனேந்தல் வழியாக மதுரை எல்லையான மூன்றுமாவடிக்கு 21-ஆம் தேதி காலை எழுந்தருள்வார்.
 மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு மதுரை பக்தர்களால் வரவேற்பளிக்கும் பூஜைகள் நடைபெறும். அங்கிருந்து சர்வேயர் காலனி, புதூர், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் பகுதி வழியாக மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகம் பகுதியில் 21-ஆம் தேதி மாலை எழுந்தருள்வார். அங்கும் கள்ளழகருக்கு பொதுமக்கள் வரவேற்பளிப்பர்.

 அன்று தல்லாகுளம் பகுதியில் உள்ள திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் இரவில் தல்லாகுளம் பிரசன்னவெங்கடாஜலபதி திருக்கோயிலில் எழுந்தருள்வார். அங்கு திருமஞ்சனமாகி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளியதும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீஆண்டாள் அனுப்பிய மாலை கள்ளழகருக்கு சாத்தப்பட்டு, நாட்டின் வளத்தைக் குறிக்கும் பட்டாடையும் சாத்தப்படும்.

 தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் 22-ஆம் தேதி அதிகாலையில் புறப்பாடாகும் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோயில், கோரிப்பாளையம் வழியாக ஆழ்வார்புரம் வந்து, காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வைகை ஆற்று முகத்துவாரத்தில் எழுந்தருள்வார்.

 ஆற்றில் அழகர் இறங்கியதற்கு பிறகு ராமராயர் மண்டகப்படி செல்லும் கள்ளழகர் பின்னர் அண்ணா நகர் வழியாக வண்டியூர் அனுமார் கோயிலில் அன்றிரவு தங்கி அருள்பாலிப்பார்.

 பின்னர், 23-ஆம் தேதி அங்கிருந்து வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பார். அதன்பின் ஷேசவாகனத்தில் ராமராயர் மண்டகப்படியில் இரவில் எழுந்தருளியதும் தசாவதாரம் நடைபெறும்.

 மறுநாள் 24-ஆம் தேதி ராமராயர் மண்டபத்திலிருந்து ராஜாங்க திருக்கோலத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் வைகை ஆற்று திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர், தல்லாகுளம் சேதுபதி மன்னர் மண்டபத்துக்கு இரவில் எழுந்தருள்வார். அங்கு இரவில் பூப்பல்லக்கு நடைபெறும். அதன்பின் 25-ஆம் தேதி காலையில் அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்படுவார்.

 அழகர்மலையில் இருந்து மதுரை புறப்பட்டு வரும் வழியில் 416 திருக்கண்ணில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 26-ஆம் தேதியுடன் மதுரை சித்திரைத் திருவிழா நிறைவடையும் என அழகர்மலை கள்ளழகர் திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...