உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

சித்திரை திருவிழா 2017


வணக்கம் அன்பர்களே, இந்த ஆண்டும் சித்திரை திருவிழா வழக்கம் போல் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது
நம் கோவிலில்  ஶ்ரீ ஹேவிளம்பி வருடம் சித்திரை 26 ம் நாள் அன்று சித்திரை திருவிழா ஆரம்பம் ஆக உள்ளது. 9.5.17 செவ்வாய் கிழமை, அன்று காலை நம் பெரிய கோவிலில் நம் சுவாமிகளுக்கு அபிஷேகத்துடன் ஆரம்பம். அபிஷேகத்திற்கு தங்களால் இயன்ற பால், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் போன்றவற்றை தரலாம். பாக்கெட் பால் அபிஷேகத்திற்கு உகந்தது அல்ல.


அதன்பின் மாலை 4:30 மணிக்கு மேல் நம் பூர்வீக கோவிலில் இருந்து திரி எடுத்து பெரிய கோவிலுக்கு சென்று பால்,பழம் வைத்து வழிபாடு.

10.5.17 புதன் கிழமை, அன்று காலை அருள்மிகு ஶ்ரீ ரெங்கநாத சுவாமியை எதிர் கொண்டு அழைத்து நம் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை, அதை தொடர்ந்து மதியம் உச்சிகால பூஜை நடைபெறும். ஸ்லோகம் எழுதும் போட்டி, குழந்தைகளுக்கான பாட்டு போட்டி, நடன போட்டி, கூடையில் பந்து போடும் போட்டி நடைபெற உள்ளது. அது தவிர மகளிர்க்கான மியூசிக்கல் சேர், ஆண்களுக்கான மியூசிக்கல் சேர் போன்ற போட்டிகளும் நடைபெறும். மாலை நம் மாதா முன்பு குத்து விளக்கு பூஜை நடைபெறும். மாலை 6:00 மணிக்கு மேல் திரி எடுத்து நம் கோவிலை வலம் வந்து பின் அனைவருக்கும் திரி காப்பு வழங்கப்படும்.

11.5.17 வியாழன் கிழமை அன்று இரவு 10:00 மணிக்கு மேல் அருள்மிகு ஶ்ரீ கருப்பசாமி, அருள்மிகு ஶ்ரீ சப்பாணி சாமி வழிபாடு.

அனைவரும் தங்களால் இயன்றபடி ஒரு வாரகாலமோ, அல்லது குறைந்தது மூன்று நாட்களாவது விரதம் இருந்து கோவிலுக்கு வருவது நல்லது.

நம் கோவிலின் சித்திரை திருவிழாவிற்கான விரதகாலம் என்பது சித்ரா பௌர்ணமிக்கு முந்தைய அமாவாசை முதல் கருப்பசாமி,சப்பாணி சாமி வழிபாடு வரையிலான பதினாறு நாட்கள் ஆகும். அதாவது வரும் 26.4.17 புதன்கிழமை முதல் விரதம் ஆரம்பித்து நம் சித்திரை திருவிழா முடியும் நாளான 11.5.17 வியாழன் கிழமை வரை ஆகும்.

இந்த முறைதான் நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதன்படி விரதம் மேற்கொண்டால் நம் சுவாமிகளின் அருளாசிகளை கண்டிப்பாக பெறமுடியும்.

இதுதவிர நம் பூர்வீக கோவிலில் வரும் 26.4.17 புதன்கிழமை காலை கோவில் சேலை வழங்கப்படுகிறது. ஆர்டர் கொடுத்தவர்கள் வாங்கி கொள்ளுங்கள்.


வரும் மே 1 திங்கள் கிழமை அன்று காலை 10:00 மணிக்கு மேல்  நம் பெரிய கோவிலில் வருடம் ஒரு முறை மட்டுமே நடைபெறும் சிறப்பு உழவாரப்பணிக்கு  அனைவரையும் பணி செய்ய அன்புடன் அழைக்கிறோம்.




கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...