உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நம்மாழ்வாரின் பக்தி

வணக்கம் அன்பர்களே, நாம் பெருமாளை எப்படி வணங்க வேண்டும், எவ்வாறு வழிபட வேண்டும் என பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான என் குரு நம்மாழ்வார் எளிய முறையில் அனைவருக்கும் விளக்குகிறார்.


நம்மாழ்வார் பக்தி.


    எனக்கு பக்தி ஒன்றும் இல்லை. உலக பற்று ஒன்றும் விடவில்லை. கண்ணா, உன்னை எப்படி வணங்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது. எல்லோரும் செய்கிறார்களே என்று நானும் உன்னை புகழ்ந்தேன். என்ன ஆச்சரியம், என் பொய்யான பக்தியைக் கூட உண்மை என்று கொண்டு எனக்கு நீ அருள் புரிந்தாய். உன் அருளைப் பெற்று விட்டேன். இனி மேல் நீ என்னை விட்டு போவதானால் போய் கொள். எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால், உன்னால் போக முடியாதே என்று ஆனந்தத்தில் மிதக்கிறார் அவர்.




கையார் சக்கரத்து என் மாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி,
மெய்யே பெற்று ஒழிந்தேன் , விதிவாய்கு இன்று காப்பார் யார் ,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே.



     பொருள் : கையில் சக்கரத்தைக் கொண்ட என் கரு மாணிக்கமே என்று என்று பொய்யாகச் சொல்லி உலக விஷயங்களில் மூழ்கி இருந்தாலும், உண்மையான உன்னை பெற்றேன் உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும். ஐயோ கண்ணபிரான் நீ என்னை விட்டுப் போய் விடுவாயா ? (போகமாட்டாய், போக முடியாது)


    பொய்யாகவேனும் பக்தி செய்தால்.நாளடைவில் அதுவே உண்மையாக மாறிப் போகும். விரும்பாமல் சாப்பிட்டாலும் லட்டு இனிக்கத்தானே செய்கிறது.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...