உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 7 ஜனவரி, 2015

புத்தாண்டு பலன் கணித்துள்ளது எப்படி?

பொதுவாக ஆங்கில புத்தாண்டுக்கும், தமிழ் புத்தாண்டுக்கும் மாறுபாடு உண்டு. சூரியனின் நிலை கொண்டு அதன் இடமாற்றத்தை கணக்கில் எடுத்து தமிழ் மாதம் கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆங்கில மாதமோ அப்படி அல்ல. இது உலக நாடுகள் அனைத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிரகங்களில் குரு பகவான் வக்ரம் அடைந்து கடக ராசியில் இருக்கிறார். ஜூலை 6ல், வக்கிர நிவர்த்தி அடைந்து கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு செல்கிறார். அதன்பிறகு டிசம்பர் 21ல் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார்.சனிபகவான் விருச்சிகத்திலும், ராகு கன்னியிலும், கேது மீனத்திலும் உள்ளனர். இவர்களில், சனிபகவான் ஜுன் 12ல் வக்கிரமாகிறார். அப்போது அவர் விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார். செப்டம்பர் 5ல், வக்கிர நிவர்த்தி அடைந்து துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு சென்று விடுவார். இவை யாவையும் கருத்தில் கொண்டு, இந்த புத்தாண்டு பலன் கணிக்கப்பட்டு உள்ளது. இங்கே தரப்பட்டிருப்பது கோச்சார பலன்களே. இதில் சிலருக்கு சுமாரான பலன்களே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அவரவர் ஜாதகத்தில் நல்ல தசை, புத்தி நடந்தால் நன்மையே நடக்கும். தசாபாதிப்பு இருந்தால், அதற்குரியதை அனுபவிக்க வேண்டி வரும். இங்கே ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விரலுக்கு தகுந்த வீக்கம் என்பதுபோல், உங்களுக்கு தகுந்த பரிகாரத்தைச் செய்தால் போதும்.
நன்றி -காழியூர் நாராயணன்

2015 இந்தியாவில் என்ன நடக்கும்?

மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். வழிபாட்டுத் தலங்கள் மேன்மை பெறும்.வாகன உற்பத்தி அதிகரிக்கும். புதிய வகை மாடல் வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். விண்வெளி ஆராய்ச்சியில் உலகம் வியக்கும் விதத்தில் நம் நாடு முன்னணியில் இருக்கும். தங்கத்தின் விலை சரியும். மக்கள் ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். நீர்வளம் பெருகி விவசாயம் செழிக்கும். விளைச்சல் அதிகரிப்பால் விலைவாசி மிகவும் குறையும். கல்வி வளர்ச்சி விகிதம் உயரும். கல்வி நிறுவனங்களில் பண்பாடு, கலாசார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கூடும். பெண்கள் முக்கியமான பதவிகளை ஏற்கும் வாய்ப்பு உண்டாகும்.மக்களுக்குப் பயனுள்ள நல்ல திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி, அதில் வெற்றி பெறும். இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டும்.சூரியக்கதிர் வீச்சும், வெப்பமும் அதிகப்படியாக இருப்பதால் தோல் சம்பந்தமான நோய்கள் அதிகமாகும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...