உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 16 மார்ச், 2011

சித்திரை திருவிழா

அழகர்கோவில் சித்திரை திருவிழா: ஏப். 14ல் துவங்குகிறது
 அழகர்கோவில் : அழகர்கோவில் சித்திரைத் திருவிழா ஏப்., 14 ல் துவங்குகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்., 18 ல் நடக்கிறது. அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்து வருகிறது. இங்கு நடக்கும் விழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை திருவிழாவாகும். சிறப்புமிக்க இத்திருவிழா இந்த ஆண்டு ஏப்.,14 ல் துவங்குகிறது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் பல்லக்கில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வருகிறார்.
மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள ஏப்., 16 ல், மாலை கள்ளழகர் வேடம் அணிந்து அழகர்கோவிலில் இருந்து தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார். அன்று இரவு முழுவதும் பக்தர்கள் அமைத்திருக்கும் 395 திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர், ஏப்., 17 ல் மதுரை வருகிறார். அன்று காலை ஆறு மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. காலை ஒன்பது மணிக்கு புதூரிலும், மாலை 6 மணிக்கு அவுட்போஸ்ட்டிலும் எதிர்சேவை நடக்கிறது. அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை வந்தடையும் கள்ளழுகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவு இரண்டு மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருமாலையை ஏற்றுக் கொண்டு தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் அழகர், தல்லாகுளத்தில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். வைகை ஆற்றில் இறங்குகிறார்: ஏப்., 18 ல் அதிகாலை அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். காலை ஆறு மணிக்கு மேல் வைகை ஆற்றில் இறங்குகிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரள்வர். அன்று பகலில் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து மாலை அங்கிருந்து புறப்படும் கள்ளழகர், அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலை சென்றடைகிறார். ஏப்.,19 ல் பகலில் வண்டியூர் வைகை ஆற்றில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. ஏப்., 20 ல் தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நடக்கிறது. தொடர்ந்து அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் ஏப்., 22 ல் காலை அழகர்மலை அடைகிறார். மறுநாள் உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. சித்திரை திருவிழாவிற்கான முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் மதுரை வரும் கள்ளழகரை வரவேற்பதற்காக மீனாட்சி அம்மன் மற்றும் கூடலழகர் பெருமாள் கோயில் சார்பில் பட்டர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...