உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 16 மார்ச், 2011

நம் அழகரைப் பற்றி

அழகர்கோவில்


இறைவன்பரமஸ்வாமி
இறைவிஸ்ரீதேவி, பூதேவி


தல மரம்                                                          ஜோதி சந்தனமரம்  விருட்சம்,                                                .

தீர்த்தம்நூபுர கங்கை
புராண பெயர்திருமாலிருஞ்சோலை
கிராமம்/நகரம்அழகர்கோவில்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : சி்த்திரைத் திருவிழா - 10 நாட்கள் ஆடிப் பெருந்திருவிழா - 13 நாள் ‌ஐப்பசி தலை அருவி உற்சவம் - 3 நாள் இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வாரத்தின் சனி ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
சிறப்பு : மூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : புத்தம், சமணம், முஸ்லிம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்காக சரித்திர சான்றுகள் உள்ளன. வைணவம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு.
பிரார்த்தனை : இங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய ‌தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமா‌ளை வணங்கலாம். இவை தவிர பெரும்பாலும் குடும்ப நலம், கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
நேர்த்திக்கடன் : தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடு்த்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூ‌மாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
முகவரி : அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்- 625 301 மதுரை மாவட்டம் .

2 கருத்துகள்:

balaji சொன்னது…

நமது கோயில் புகைப்படங்கள் http://dl.dropbox.com/u/21927534/Alagar/Ranganaadhar.jpghttp://dl.dropbox.com/u/21927534/Alagar/Vinayagar.pnghttp://dl.dropbox.com/u/21927534/Alagar/madha_perumal_2011_1st_day.pnghttp://dl.dropbox.com/u/21927534/Alagar/madha_perumal.pnghttp://dl.dropbox.com/u/21927534/Alagar/Karuppa_Sappani.pnghttp://dl.dropbox.com/u/21927534/Alagar/Karuppa_Sappani_11.pnghttp://dl.dropbox.com/u/21927534/Koil_2011.rar

balaji சொன்னது…

நமது கோயில் புகைப்படங்கள்


http://dl.dropbox.com/u/21927534/Alagar/Ranganaadhar.jpg
http://dl.dropbox.com/u/21927534/Alagar/Vinayagar.png
http://dl.dropbox.com/u/21927534/Alagar/madha_perumal_2011_1st_day.png
http://dl.dropbox.com/u/21927534/Alagar/madha_perumal.png
http://dl.dropbox.com/u/21927534/Alagar/Karuppa_Sappani.png
http://dl.dropbox.com/u/21927534/Alagar/Karuppa_Sappani_11.png
http://dl.dropbox.com/u/21927534/Koil_2011.rar

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...