உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

சனி, 19 மார்ச், 2011

நம் கோவிலின் சித்திரை திருவிழா

வணக்கம் அன்பு நெஞ்சங்களே, நம் கோவிலில் இந்த வருடம் சித்திரை திருவிழாவை  வழக்கம் போல் சிறப்பாக கொண்டாடுவதற்க்காக  நம் பூர்வீக கோவிலில் கடந்த 13.3.11 ஞாயிற்றுக்கிழமை  சென்னை உயர்திரு T.A.J.வெங்கடேசன்   அவர்கள் தலைமையில் பங்காளிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
                                                                       


அதில் தீர்மானிக்கபட்ட விஷயங்கள் நிகழும் மங்களகரமான ஸ்ரீ கர வருடம் சித்திரை மாதம் 4ம் நாள் 17.4.11 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நம் பூர்வீக கோவில் வீட்டில் பால் பழம் வைத்து சுவாமி கும்பிட்டு, அதன் பின் அருப்புக்கோட்டை ரோட்டில் இருக்கும் நம் அழகுமலை சுவாமி கோவிலுக்கு சென்று பெரிய சாமி மற்றும் ஸ்ரீ மாதா கும்பிடுதலும் மறுநாள் 18.4.11 திங்கட்கிழமை  அழகுமலை சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் சுவாமி  கும்பிடவும். மறுநாள் 19.4.11 செவ்வாய் கிழமை இரவு 9.00 மணிக்கு மேல் சப்பாணி சாமி மற்றும் கருப்பணசாமி  கும்பிடவும், தலைக்கட்டு வரி  வழக்கம் போல் ரூ 201 ஆகவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் தங்கள்  பிறந்த மக்களுடன் குடும்ப சகிதமாக வருகை தந்து ஸ்ரீ அழகுமலை சுந்தரராஜ பெருமாள் , ஸ்ரீ மாதா , ஸ்ரீ கோவிந்த விநாயகர், ஸ்ரீ  கருப்பசாமி, ஸ்ரீ  சப்பாணி சாமி அருளும்  அடைய வேண்டுகிறோம்.

1 கருத்து:

ஜெ.வெங்கட் ரமணா சொன்னது…

சித்திரை திருவிழாவில் உங்கள் அனைவரையும் கோவிலில் சந்திக்கிறேன். நன்றி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...