உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 1 மே, 2012

அழகாய் அழகர் வராரு....

ரமாட்டு வண்டி பயணம், சர்க்கரை சொம்பில் சூட தரிசனம், ஜவ்வு மிட்டாய் என, மாறாத மண் மணத்துடன் நடக்கும், மதுரை சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக களை கட்டியுள்ளது.
மே 2ல், நடக்கும் திருக்கல்யாணமாகட்டும், மே 3ம் தேதி நடக்கும் தேரோட்டமாகட்டும், மே 6ம் தேதி நடக்கும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவாகட்டும், மதுரையே பக்தி கோலம் பூண்டு விடும்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

நம் கோவிலில் இன்று

வணக்கம்  அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று 29.4.12 ஞாயிறு காலை நம் பெரிய கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் திருநன்நீராட்டு வைபவம் நடைபெற இருக்கிறது.

திங்கள், 16 ஏப்ரல், 2012

மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள்

வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும். வந்தால் போகாதது இரண்டு- புகழும், பழியும். போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும். தானாக வருவது இரண்டு- இளமையும், முதுமையும். உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும். அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும். தவிர்க்க முடியாதது இரண்டு- பசியும், தாகமும். பிரிக்க முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும். இழிவைத் தருவது இரண்டு- பொறாமையும், கோபமும்.  அனைவருக்கும் சமமாவது இரண்டு- பிறப்பும், இறப்பும். இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...