உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

அழகர்கோவில் ஆடி திருவிழா

வணக்கம் அன்பர்களே, நம் அழகர்கோவில் ஆடி திருவிழா ஆக., 5ல் கொடியேற்றம்.

அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித் திருவிழா, வரும் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 13ல், தேரோட்டம் நடக்கிறது. ஆடி திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, வரும் 4ம் தேதி இரவு அங்குரார்பணம் நடக்கிறது. 5ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. பின், 10.15க்கு தேருக்கு முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் முதல் ஆக., 12 வரை தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் முறையே கருடன், அன்னம், சிம்மம், அனுமன், சேஷம், யானை மற்றும் பூப்பல்லக்கில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள், கோவிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேரோட்டம் 13ம் தேதி நடக்கிறது. இதற்காக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் காலை 6 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார். காலை 8.30க்கு மேல் பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 7.30க்கு சுந்தரராஜ பெருமாள், குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வருகிறார். மறுநாள் திருவிழா சாற்றுமுறையுடன் நிறைவு பெறுகிறது. பவுர்ணமி அன்று இரவு கோவில் காவல் தெய்வமான 18ம் படி கருப்பண சுவாமிக்கு சந்தனக் காப்பு நடக்கிறது. மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், சுவாமிக்கு சந்தனம் சாத்துபடி செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...