உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

3.8.2011 ஆடி 18ம் பெருக்கு

வணக்கம் அன்பர்களே, கடந்த 3.8.2011 புதன்கிழமை நம் கோவிலில் ஆடி 18 ம் பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நம் அருப்புக்கோட்டை ரோட்டில் அமைந்திருக்கும் பெரியகோவிலில் காலை 9:00 மணிக்கு மேல் எல்லா சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்யப் பட்டது. வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து நிறைய பங்காளிகள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின் எல்லா சுவாமிகளுக்கும் அலங்காரம் செய்து உச்சிகால பூஜை செய்து வணங்கி, அனைவரும் பிரசாதம் சாப்பிட்டு விட்டு மூன்று வேன்களில் சுமார் 70 பேர் அழகர்கோவிலுக்கு சென்றோம். வழியில் புதூர் வசந்தம் ஹோட்டலில் உணவு இடைவேளை. பின் அழகர்கோவிலில் பொங்கலிட்டு அழகரையும்,தாயாரையும், 18ம் படி கருப்பணசுவாமியையும் தரிசித்து விட்டு பொங்கல் பிரசாதம் சாப்பிட்டு விட்டு யானைமலை நரசிங்கம் ஊரில் நரசிம்மரையும், நரசிங்கவள்ளி தாயாரையும் வணங்கி இந்த ஆடி 18ம் பெருக்கு திருவிழாவை நிறைவு செய்தோம். பின் நம் கோவிலுக்கு வந்து சுவாமியை வணங்கி வீட்டிற்க்கு வந்தோம். இந்த முறை வராதவர்களும் அடுத்து விநாயகர் சதுர்த்திக்கு தவறாமல் வருகை தாருங்கள். நன்றி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...