உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சித்திரை திருவிழா விரதம்

வணக்கம் அன்பர்களே, நமது சித்திரை திருவிழாவின் சிறப்புக்களில் ஒன்றான விரதம் அனுஷ்டித்தல் நாளை 18.4.15 சனிக்கிழமை அமாவாசை முதல் தொடங்க இருக்கிறது. நம் கோவிலின் விரத காலம் என்பது சித்திரை திருவிழாவிற்கு முந்திய அமாவாசை தொடங்கி சித்திரை திருவிழா நிறைவு பெறும் வரை ஆகும். இது நம் முன்னோர்கள் வழிவழியாக கடைபிடித்து வந்த ஒன்றாகும். நாம் பெருமாளை நெருங்கி செல்ல விரதம் அனுஷ்டித்தல் மிக சிறப்பான வழியாகும்.
விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல. உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள். அப்படி பூஜைகள் செய்யும்போது புலனடக்கம் தேவை என்பதால்தான் உணவில் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன.
விரதத்திற்கு முதல் நாளே வீட்டைக் கழுவியோ அல்லது மஞ்சள் நீரினைத் தெளித்தோ தூய்மைப்படுத்துங்கள். விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம், திருநீறு, சந்தனம் அணியுங்கள்.
குடும்பத்துப் பெரியவர்களிடமோ, பெற்றோரிடமோ ஆசிபெற்றும் வாழ்க்கைத் துணையின் அனுமதியோடும் விரதத்தினை மேற்கொள்வது நல்லது. இதனால் விரதகாலத்தில் பிறரால், எதிர்பாராத மனவருத்தங்கள் வராமல் இருக்கும்.
விரதகாலத்தில் உண்ணாமல் இருப்பதும், அவசியமானால் மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும் அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்றபடியானது. அதேசமயம் ஏகாதசி விரதம் போன்ற விரதங்களில் உணவருந்தாமல் இருப்பது அவசியம். எனவே உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற விரதத்தினை அனுசரிப்பதே நல்லது. விரதம் இருக்கும் சமயத்தில் இயன்றவரை இறை சிந்தனையுடன் இருப்பது அவசியம். முடிந்தவரை பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். விரதகாலத்தில் எவர்மீதும் கோபப்படுவதோ, வீண்விவாதங்கள் செய்வதோ கூடாது. பெருமாளின் துதிகள், பாடல்களை அன்று முழுவதுமே கேட்பது, படிப்பது, சொல்வது நல்லது. தெரியாதவர்கள் பெருமாளின் பெயரையே திரும்பத்திரும்ப சொன்னாலும் போதும்.
எந்த விரதமாக இருந்தாலும் அதில் ஆடம்பரமோ அல்லது கஞ்சத்தனமோ வேண்டாம். உங்களால் என்ன இயலுமோ அதனை நிறைவாகச் செய்யுங்கள்; அது போதும்.
விரதம் இருப்பது நிச்சயம் பலன்தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அதே சமயம் பலனை எதிர்பார்த்து மட்டுமே அனுசரிக்காமல் மனப்பூர்வமாக பக்தியுடன் கடைப்பிடியுங்கள். விரதம் இருப்பதோடு உங்களால் இயன்ற உதவியினை வசதியில் குறைந்தவர்களுக்குச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை குறைவேதும் இல்லாமல் கோலாகலமாக அமையும். ஓம் நமோ நாராயணாய.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...