உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 27 ஏப்ரல், 2015

சிறப்பாக நடைபெற்ற சிறப்பு உழவாரப்பணி


வணக்கம் அன்பர்களே, நேற்று 26.4.15 ஞாயிற்றுகிழமை காலை 9:30 மணிக்கு நம் பெரிய கோவிலில் தொடங்கிய சிறப்பு உழவாரப்பணி இரவு 8:30 மணி வரை நடைபெற்றது.
கிட்டத்தட்ட ஒரு சிறிய சித்திரை திருவிழா போல் நடைபெற்றது இந்த சிறப்பு உழவரப்பணி. ஏறத்தாழ எழுபது பேர் கலந்து கொண்டு நம் சுவாமிகளுக்கு திருப்பணி செய்து மகிழ்ந்தனர். கோவிலை தூய்மை செய்து, கோலமிட்டு மகிழ்ந்தனர் நம் பெண்கள். குழந்தைகள் கூட தங்களால் இயன்ற பணிகளை செய்தது கண்கொள்ளா காட்சிகள். இதனை கண்டு நம் சுவாமிகளே மிக்க மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள். திருப்பணி செய்த அனைவரும் மிகவும் ஈடுபாட்டுடன் தங்கள்  பணிகளை சிறப்பாக செய்தனர். இந்த திருப்பணியை தவற விட்டவர்கள் வரும் சித்திரை திருவிழாவில் கலந்து திருப்பணி செய்து மகிழுங்கள், அடுத்த வருடம் சிறப்பு உழவாரப்பணியில் தவறாது கலந்து கொண்டு சுவமிகளின் அருளாசிகளை பெறுங்கள். அது மட்டுமல்லாது மாதத்திற்கு  இருமுறை நடைபெறும் உழவாரப்பணியிலும் கலந்து கொள்ளுங்கள்.

உளமாரப்பணி :  

நம் கோவிலில் நடைபெறும் உழவாரப்பணியை உளமாரப்பணி என்றும் அழைக்கிறோம் ஏனெனில் நம் கோவிலில் நாம் செய்யும் உளவாரப்பணியை நம் முழு மனதோடு உளமாற செய்வதால் உளமாரப்பணி என்றும் அழைக்கிறோம்.  நன்றி.


















கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...