உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?

பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம். நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதாதா? என்றே பலரும் நினைக்கின்றனர். நீயும் உருவாகு; பிறரையும் உருவாக்கு என்பது சுவாமி விவேகானந்தரின் மேன்மையான கருத்து.  சுவாமிஜி மட்டுமல்ல, பல அறிஞர்கள் இதற்கான தேவையைப் பல தலைமுறைகளாகப் போதித்து வருகின்றனர்.

உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள். மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.
அன்பர்களே எனது கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது, இணைய இணைப்பில் கோளாறு காரணமாக பதிவிடமுடியவில்லை. மேலும் என் Hard disc crash ஆகி விட்டதால் சித்திரை திருவிழா புகைபடங்கள் உள்ளிட்ட பழைய படங்கள் அனைத்தும் அழிந்து விட்டது. எனவே வெகு விரைவில் சித்திரை திருவிழா படங்களை பதிவிடுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். மேலும் நம் கோவிலில் 27.7.12 வெள்ளிகிழமை மாலை நம் பூர்வீக கோவிலில் வரலெஷ்மி பூஜை கொண்டாடப்பட உள்ளது. 2.8.12 வியாழன் கிழமை ஆடி 18ம் பெருக்கு நம் பெரிய கோவிலில் கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் அவசியம் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசிகளை பெற அழைக்கிறோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...