உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 30 ஏப்ரல், 2014

மே 14 ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்

வணக்கம் அன்பர்களே, மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக, மே 14ல் காலை 6 முதல் காலை 6.30 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
http://www.nativeplanet.com/photos/big/2013/03/_13635963780.jpg


மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நிர்வாக அதிகாரி வரதராஜன் கூறியதாவது: மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 12ல் மாலை 5.30 மணிக்கு மேல் மாலை 6 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளுகிறார். மே 13ல் காலை 7 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 14ல் காலை 6 முதல் காலை 6.30 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல். மே 15ல் தேனூர் மண்டபத்தில் காலை 11 மணிக்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம். இரவு 11 மணிக்கு ராயர் மண்டபத்தில் தசாவதாரம். மே 16ல் ராமராயர் மண்டபத்தில் காலை 6 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருளல். மே 17 ல் அதிகாலை 2.30 மணிக்கு கருப்பண சுவாமி கோயிலில் பூப்பல்லக்கு. மே 18 ல் இரவு 2 மணிக்கு அப்பன்திருப்பதியில் எழுந்தருளல். காலை 10.30 மணிக்கு இருப்பிடம் சேர்தல். தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதால் புதிய மண்டகப்படிக்கு அனுமதி வழங்கவில்லை. 407 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். மண்டகப்படி கட்டணம் 10 லட்சம் ரூபாய். புதிய கட்டணம் குறித்து இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கமிஷனர் முடிவு செய்வார். ஏற்பாடுகளை கோயில் தக்கார் வி.ஆர்.வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செய்து வருகின்றனர், என்றார்.
நன்றி -  தினமலர் .

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...