உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

நோயாளிகளுக்கு உடலை வருத்தாத விரதம்

வணக்கம் அன்பர்களே, இன்றைய துரித உலகில் பெற்ற தாயோடு இருப்பவர்களை விட நோயோடு இருப்பவர்கள் தான் அதிகம்.  அதனால் தான் இந்த பதிவில் நோயாளிகளுக்கு உடலை வருத்தாத விரதத்தை பற்றி காண்போம்.
விரதமிருக்கும் போது பட்டினியாக இருப்பது மரபு. இது சிலருக்கு ஒத்துக்கொள்ளும். பலருக்கு முடியாது. குறிப்பாக, நோயாளிகளுக்கு தினமும் சாப்பிட்ட பிறகே மாத்திரை போட வேண்டியிருக்கும். இவர்கள் விநாயகர் வழிபாட்டை மிக எளிமையாக மேற்கொள்ளலாம். அவ்வையாரின் பாடல் ஒன்றைக் கேளுங்கள்.

வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம், மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கை யான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

இந்தப் பாடலில் வரும்மேனி நுடங்காது என்ற வார்த்தைக்கு உடம்பை வருத்தாமல் இருத்தல் எனப்பொருள். உடம்பை வருத்தாமல், பூக்களை மட்டும் கொண்டு, சிவந்த மேனியை உடைய, விநாயகரின் பாதத்தில் பூஜித்தால் சிறந்த வாக்குவன்மை, நல்ல மனம், லட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும் என்கிறார். இவை தானே ஒரு மனிதனுக்கு தேவை! இந்த எளிய வழிபாட்டை நோயாளிகள் தினமும் கடைபிடித்து இறைவனின் திருவருளை அடையலாம். நன்றி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...