உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

கோவிலில் விளக்கு ஏற்றுவதில் போட்டியா?

வணக்கம் அன்பர்களே,  கோவிலில்  யார் முதல் தீபம் போடுகிறார்கள், யார்  இரண்டாவது என பேதம் இல்லை.
அதுமட்டுமன்றி பெரிய கோவில்களில் அர்ச்சகர்களுக்கு மட்டுமே கருவறையில் அனுமதி. அதனால் அவர் மட்டும் தான் தீபம் இட முடியும், அதனால் அந்த ஊரில் அவர் மட்டும் தான் நல்ல நிலையில் இருக்கிறாரா? அப்படியெல்லாம் இல்லை அவரவர்க்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் (நன்மையும், தீமையும்) அவரவர் பலாபலன்படி கண்டிப்பாக கிடைத்தே தீரும். இது தவிர கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா என நிறைய பேர் மனக்குழப்பத்திலேயே இருக்கின்றனர். இதற்கு பதிலை இந்த பதிவில் காண்போம்.


பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் தீபம் ஏற்றினால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் பிறருக்கும் போய்விடாது. சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது. எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியில் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...