உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

நம் சுவாமிகளின் பாடல்கள்

வணக்கம் அன்பர்களே, நம்  பங்காளிகள் அனைவரும் அவசியம் மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டிய நம் சுவாமிகளின் ஸ்லோகங்கள் உங்களுக்காகவே. இவை மனப்பாடம் செய்வதற்க்கு அல்ல மனதாற நம் சுவாமிகளை அழைப்பதற்க்காக.
ஸ்லோகங்களை தினமும் மனதாற சொல்லி நம் தெய்வங்களை வணங்கினால் மலை போல் வந்து கொண்டிருக்கும் துயர் கூட மழைத்துளி போல் நீங்கிவிடும். 
ஸ்லோகங்களை சொல்லுவதற்க்கு நேரம்,காலம் தேவை இல்லை. எப்போது வேண்டுமென்றாலும் பாராயணம் செய்யலாம். தயவுசெய்து கடவுளை துன்பத்தின் போது மட்டும் நினைக்காமல் எல்லா சூழ்நிலைகளிலும் நினைக்கப் பழகுங்கள். நல்லது நடக்கும் போதும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். ஒரு கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்தில் நமக்கு உட்கார இடம் கிடைத்தாலும் கூட அது கடவுளின் செயல்தான், அதுவும் நமக்கு ஒரு நல்லது நடந்த சூழல் தான். இது போன்று நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு சிறு செயல்களுக்கும் நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யும் போது கடவுள், நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் இருந்தாலும் நம்முடனே இருந்து வழிநடத்துவார். இது வெறும் எழுத்தல்ல பலருடைய  அனுபவம்.

பெருமாள் ஸ்லோகம்

ஓம்    நாராயணாய வித் மஹே வாசு தேவாய தீமஹீ
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்



மஹாலட்சுமி ஸ்லோகம்

ஓம் மஹா தேவ்யேஸ வித் மஹே விஷ்ணு பத்னிச தீமஹீ
தன்னோ லக்ஷ்மிப்ரசோதயாத்


விநாயகர்  ஸ்லோகம்

ஓம் ஏக தந்தாய வித் மஹே வக்ர துண்டாய தீமஹீ
தன்னோ தந்தி ப்ரசோதயாத்


கருப்பசுவாமி பாடல்

வீச்சரிவாள் கையில் ஏந்தி எங்கள் வம்சம் காக்கும்
மாவீரன் கருப்பசாமி
சலங்கை ஒலிக்க சந்தனம் பூசி வந்து நீதி சொல்லி எங்கள்
குலம் காக்கும் மாவீரன் கருப்பசாமி


சப்பாணி சுவாமி பாடல்

வாசல் பிரதாணி எங்கள் வம்சம் காக்கும்
மதம் பொழிந்த சப்பாணி
தேசப் பிரதாணி எங்கள் பாட்டன் மடியிலே
புரண்டெழுகும் எங்கள்  சப்பாணி



நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...