உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

நமது கோவிலின் திருவிழாக்கள்

வணக்கம் அன்பர்களே, பூலோகத்தில் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான  திருமாலிருஞ் சோலை என்று அழைக்கப்படும்
அழகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளை குலதெய்வமாக பெற்று இருப்பது தில்லை கோவிந்தன் வகையறாவில் பிறந்த நாம்  செய்த பாக்கியமாகும். கலியுகத்தில் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவற்றில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெற எல்லோரும்  தங்கள் குலதெய்வத்தை மிகுந்த நம்பிக்கையுடன் வழிபட்டு பலன் பெறுவதை தவிர வேறு எளிய வழி கிடையாது.


            1. சித்ரா பௌர்ணமி திருவிழா
  • 2. ஆடி 18ம் பெருக்கு (சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து அழகர் கோவிலுக்கு சென்று பொங்கலிடுதல்)
  • 3. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று மாலையில்   பொங்கலிடுதல்
  • 4. புரட்டாசி 3வது சனிவாரம்  மாலையில்   பொங்கல் வழிபாடு
  • 5. தை மாத பிறப்பன்று  மாலையில்  பொங்கல் வழிபாடு
  • 6. மாசி மாத கடைசி சனி மாதா வழிபாடு

மேற்கண்ட திருவிழாக்களில் நம் அனைத்து பங்காளிகளும் தவறாது கலந்து பெருமாள்,தாயார்,கோவிந்த விநாயகர், கருப்பசாமி, சப்பாணி சாமி அருள் பெற அழைக்கிறோம். நன்றி.


கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...