உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 7 மே, 2014

16 செல்வங்கள்

பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். அவற்கள் கூறுவது எதை தெரியுமா?.. இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும்.

1. வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி,
2. நீண்ட ஆயுள்,
3. நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள்,
4. வாழ்க்கைக்கு தேவையான செல்வம்,
5. உழைப்புக்கு தேவையான ஊதியம்,
6. நோயற்ற வாழ்க்கை,
7. எதற்கும் கலங்காத மனவலிமை,
8. அன்புள்ள கணவன் மனைவி,
9. அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள்,
10. மேன்மேலும் வளரக்கூடிய புகழ்,
11. மாறாத வார்த்தை,
12. தடங்கலில்லாத வாழ்க்கை,
13. வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல்,
14. திறமையான குடும்ப நிர்வாகம்,
15. நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு,
16. பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறி வாழ்த்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...