உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கணுமா

வணக்கம் அன்பர்களே, உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்க அதிகாலையில் எழுந்ததும் கொல்லைப்புற வாசலைத் திறந்த பின்னரே, தலைவாசலைத் திறக்க வேண்டும். பசுவின் முகத்தில் விழிக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அவசியம் குத்துவிளக்கு ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும். பொருள் வளமும், சந்தோஷமும் பெருகும். பவுர்ணமியன்று மாலையில், பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...