உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 13 ஜனவரி, 2014

தகவல் துளிகள்

வணக்கம் அன்பர்களே,
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது.

திருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம் "சுவாதி என்று யஜுர்வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இது நரசிம்மருக்குரிய நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் திருமணம் நடத்தப்பட்டால், அந்தப் பெண் கணவனிடம் கோபித்துக் கொள்ள மாட்டாள். புகுந்தவீட்டிற்கு பெருமையும், பிறந்த வீட்டுக்கு நற்பெயரும் வாங்கித் தருவாள். கணவர், மாமியார், நாத்தனார் பிரச்னை செய்கிறார்கள் என கண்ணைக் கசக்கிக் கொண்டு வீட்டுக்கு வரமாட்டாள் என்றும் யஜுர் வேதத்தின் முதல் அஷ்டகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.  இதுதவிர, ஒரு பெண்ணின் ஜென்ம (பிறந்த) நட்சத்திரத்தில் இருந்து எண்ணும் போது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 24வது நட்சத்திரங்களும் திருமணம் நடத்த சிறந்தவையே.

எலுமிச்சையை நான்காக கீறி, உள்ளே குங்குமம் வைத்து தலையைச் சுற்றி பிழிந்து விட வேண்டும். பின்பு நான்கு துண்டுகளையும் மூலைக்கு ஒன்றாக வீசி விட வேண்டும். வீட்டு வாசலில் வைத்து காலை வேளையில் இந்த சடங்கை செய்து விட வேண்டும். இரவில் திருஷ்டி கழிப்பதாக இருந்தால் கற்பூரத்தை சுற்றி எரித்தாலே போதுமானது.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...