உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

கண்ணன் வழிபட்ட காமதேனு

வணக்கம் அன்பர்களே,மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கோகுலத்தில் வளர்ந்த சமயத்தில், கோகுவாசிகள் ஆண்டுதோறும் செய்துவந்த இந்திர பூஜையை நிறுத்தச் சொன்னார். அதனால் இந்திரன் கோபம் கொண்டு கடும் மழை பொழியச் செய்தான். ஊரும் உயிர்களும் நீருள் மூழ்கித் தவிக்க, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து அதன்கீழ் சகலரையும் இருக்கச் செய்து காத்தார்.
கோகுலவாசிகளை தன்னால் எதுவும் செய்ய இயலாது என உணர்ந்து கண்ணனிடம் வந்து மன்னிப்புக் கேட்டான் இந்திரன். இந்திரபூஜை நின்றாலும், இந்திரனை அவனது தம்பி உபேந்திரனையும் சேர்த்து வழிபடச் சொல்லி, அப்படி வழிபடுவோர்க்கு எல்லா சுகங்களும் கிடைக்கட்டும் என்று பகவானே ஆசியளித்தார் அந்த நாளே, போகி.

 இந்திர உபேந்திரர்களுடன் கோகுலவாசிகளும் இணைந்து நாராயணனின் அம்சமாகிய சூரியநாராயணனை வழிபட்டனர். அந்த தினமே ஸங்கராந்தி(பொங்கல்) பசுக்களைக் காத்ததால், காமதேனு ஆநிரைகளோடு முன்னின்று தனது பாலால் அபிஷேகித்து கண்ணனை வழிபட்டு கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்தாள்.  கோவிந்தனை கோவாகிய காமதேனு வழிபட்டு செய்த பூஜையே மாட்டுப் பொங்கல்.  சூரியனை, தினமும் காயத்ரியாலும், சூரியநமஸ்காரத்தாலும், ஆதித்ய-ஹ்ருதயம் போன்ற ஸ்லோகங்களாலும் பூஜிக்கிறோம்.

Temple images

ராமபிரான், ராவணனை வெல்லவும், பாண்டவர் அட்சயபாத்திரம் பெறவும், ஸத்ராஜித் என்னும் அரசன் ஸ்யமந்தக மணியைப் பெறவும் அவர்கள் சூரியனை வழிபட்டதே காரணம். கிருஷ்ணருக்கும் சாம்பவதிக்கும் பிறந்தவனான ஸாம்பன் சாபத்தால் பெற்ற பெரு நோய், சூரியனின் அருளால், நீங்கப் பெற்றான், ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண அதாவது எப்போதும் சூர்ய மண்டலத்தில் மத்தியில் இருப்பவன் நாராயணன் என்கிறது. வேதசாஸ்திரம். அருள், ஆரோக்கியம், அறிவு, ஆகியன தருபவன் சூரியன். இந்திரனைப்போல் சகல பாக்யங்களும் பெற வேண்டி போகியும் அவற்றை முழுமையாக அனுபவித்திட ஆயுளும் ஆரோக்யமும் வேண்டிச் செய்யும் சூர்ய நமஸ்காரமும் ஸங்காரந்தியும் (பொங்கல்) மறுநாள் மகாலட்சுமியின் அருள்கிட்டச் செய்யும் கோ பூஜையான மாட்டுப்பொங்கலுமேல மார்கழி கடைசிதினமும், தையின் முதல் இரு நாட்களும் பண்டிகை கொண்டாடுவதன் உட்பொருளாகும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...