உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 27 அக்டோபர், 2011

கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் தத்துவம்

வணக்கம் அன்பர்களே, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துகின்றனர்
இவ்வாறு கோவிலில் முடி காணிக்கை செலுத்துவதன் தத்துவம் என்னவென்றால் இதற்கு ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது. வருஷபன் என்ற அசுரன் பரமபதம் வேண்டி மலையப்ப சுவாமியை தரிசிப்பதற்கு முன்பு தினந்தோறும் யாகம் செய்வான். அப்படி ஒருநாள் யாகம் செய்யும்போது பக்தி மிகுதியால் தன் தலையையே புஷ்பமாக கருதி கிள்ளி எடுத்து நெருப்பில் போட்டு விட்டான். இதை நினைவு கூறும் விதத்தில் பக்தர்கள் தலைமுடியை புஷ்பமாக சமர்ப்பித்து தான் என்ற அகங்காரத்தை அகற்றி இறைவனை வழிபடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...